செய்திகள் :

கோவை: மாமன்றத்திற்குள் போலீஸை அழைத்த மேயர்; உள்ளே வராத காவல்துறை! - பரபரத்த மாநகராட்சி கூட்டம்

post image

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கோவை மாநகராட்சியின் முதல் மாதாந்திர கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கோவை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தியதால், தி.மு.க - காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை தூக்கி கொண்டு வந்து முழக்கமிட்டபடி, அதை மாமன்ற கூட்ட அரங்கில் மாட்ட முயன்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினரும் காமராஜர் படத்தை தூக்கி கொண்டு வரவே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுக, காங்கிரஸ் போராட்டம்
திமுக, காங்கிரஸ் போராட்டம்

அப்போது தி.மு.க-வினர், “காங்கிரஸ் துரோகிகள் ஒழிக , காங்கிரஸ் ஒழிக” என முழக்கம் எழுப்பினர். மேலும், ”மாமன்ற கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியே வெளியேறு” எனவும் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சூழலில் கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார். மேலும்  தமிழக அரசு ஆணைப்படி முன்னாள் முதல்வர் புகைப்படம் மாட்டலாம் என இருக்கின்றது எனவும், எனவே முன்னாள் முதல்வர் புகைப்படம் மாட்டலாம் எனவும் அறிவித்ததால், இரு தரப்பினரும் சமரசமாகினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்கள், “காங்கிரஸ் கட்சியையும், காமராசரையும் தி.மு.க.வினர் ஒழிக என்கின்றனர். தி.மு.க-வினரின் செயல்பாடுகளை டெல்லி தலைமைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். இனி எக்காலத்திலும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க கூடாது என வலியுறுத்த இருக்கிறோம்” என்றனர்.

மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சி கூட்டம்

பின்னர் மாநகராட்சி கூட்டம் நடந்த நிலையில், ஊழல் அதிகரித்து இருக்கும் கோவை மாநகராட்சியை கலைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அ.தி.மு.க கவுன்சிலர்கள் மேயர் ரங்கநாயகி இருக்கை முன்பாக கையில் பதாகைகளுடன் முழக்கம் எழுப்பினர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகிய இருவரையும் மன்ற கூட்டத்தில் இருந்து வெளியேற்ற மேயர் ரங்கநாயகி பலமுறை காவல்துறையை மாமன்ற கூட்டத்திற்குள்  அழைத்தார். ஆனால்  காவல் துறையினர் உள்ளே வராத நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அதிமுக கவுன்சிலர்களை மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக மாமன்ற கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் நிலவியது.

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.அதையடுத்து ஆகாஷ் டெலிச... மேலும் பார்க்க

"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் உள்ள... மேலும் பார்க்க

தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்கு அப்பாவு கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காத த.வெ.க, ஆட்சி அமைக்க தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்ட கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கின. அதேநேர... மேலும் பார்க்க

'அமைச்சர் பதவிகள் சரிதான்; ஆனால், துறை?' - முதல்வர் ரங்கசாமியின் `நோ போர்ட்ஃபோலியோ’ பாலிசி தொடருமா?

புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுதியிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார... மேலும் பார்க்க

"G7 நாடுகள் இனி உலகை ஆள முடியாது" - சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து கனடா பிரதமர்

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர். இந்த அமைப்பில்... மேலும் பார்க்க

'எல்லாருக்காகவும் திறந்திருக்கும் கதவு!' - தலைமைச் செயலகத்தில் கவனம் ஈர்க்கும் அமைச்சர் வன்னிஅரசு!

தலைமைச் செயலகத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை, ஒரு அமைச்சரின் அறைக்குரிய நடைமுறைகளை கடந்து விளிம்பு நிலை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபட த... மேலும் பார்க்க