செய்திகள் :

'சந்திரபாபு நாயுடுவை இறக்கிய என்.டி.ஏ' - ஒரே ரவுண்டில் ஆனந்துக்கு தி.நகரை வென்று கொடுத்த விஜய்!

post image

தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியில் கிட்டத்தட்ட 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அதிமுகவும் பாஜகவும் வலுவாக இருக்கும் தொகுதியில் ஆனந்த் எப்படி வெற்றிக் கொடியை நாட்டினார்?

Bussy Anand
Bussy Anand

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கருணாநிதி தி.நகர் தொகுதியில் வென்றிருந்தார். அதிமுக - பாஜக சார்பில் போட்டியிட்ட தி.நகர் சத்யா வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றிருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்குள் அதிமுக சார்பில் சத்யாவும் பாஜக சார்பில் வினோஜ்.பி.செல்வமும் போட்டியிட வேலைகளை பார்த்து வந்தனர். தொகுதிக்குள் இருக்கும் பொதுப்பிரிவு மக்களின் வாக்குகள், தெலுங்கு மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

அதிமுக சார்பில் சத்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் வினோஜ் செல்வமும் அவருக்காக வேலை பார்த்திருந்தார். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ராஜா அன்பழகன் தொய்வான பிரசாரங்களால் வீக்கான போட்டியாளராகவே பார்க்கப்பட்டார்.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு பேசும் மக்களை குறிவைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் பிரசாரம் செய்ய அழைத்து வந்திருந்தனர்.

Vijay
Vijay

இன்னொரு பக்கம் தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் தொகுதிக்குள் ஆக்டிவாக பிரசாரம் செய்யவில்லை. விஜய் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஆனந்த் செல்ல வேண்டியிருந்தது. அதனாலயே ஆனந்தின் பிரசாரம் பாதிக்கப்பட்டது.

ஆனால், ஆனந்த்துக்கு ஆதரவாக ஒரு நாள் தொகுதிக்குள் விஜய் வலம் வந்தார். விஜய் அடித்த அந்த ஒரு ரவுண்டே தொகுதியை புஸ்ஸி ஆனந்துக்கு சாதகமாக மாற்றிவிட்டது. இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் பெருவாரியாக ஆனந்துக்கு விழவே கிட்டத்தட்ட 13000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க