செய்திகள் :

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

post image

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

அதன்பிறகு செல்வகுமாருக்கு மீனம்பாக்கத்தைச் சேர்ந்த திருமணமான ரீனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ரீனாவை செல்வகுமார் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த ரீனாவுக்கும் செல்வகுமாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் செல்வகுமாரைப் பிரிந்து ரீனா சென்றுவிட்டார். செல்வகுமாரைப் பிரிந்த ரீனா, ரக்சிகா இருவரும் தோழிகளாகினர்.

கொலை வழக்கில் கைதான ரீனா

இதையடுத்து ரீனா, அலெக்ஸ்பாண்டியன் என்பவருடனும் ரக்சிகா, 17 வயது சிறுவனுடனும் பழைய பல்லாவரம் பகுதியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்த செல்வகுமார், ரீனா, ரக்சிகா ஆகியோருடன் அடிக்கடி போனில் சண்டை போட்டு வந்தார்.

அதனால் செல்வகுமாரை தீர்த்துக் கட்ட தோழிகள் ரீனாவும் ரக்சிகாவும் முடிவு செய்து அந்தத் தகவலை அலெக்ஸ்பாண்டியன், சிறுவன் ஆகியோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கடந்த புதன்கிழமை இரவு (14-ம் தேதி) செல்வகுமாரை பழைய பல்லாவரம், சுபம் நகருக்கு வரவழைத்தனர்.

தனியாக வந்த செல்வகுமாரை அருண்பாண்டியன், சிறுவன் ஆகியோர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அப்போது செல்வகுமாரின் ஆண் உறுப்பையும் அவர்கள் வெட்டினர். இந்தச் சமயத்தில் செல்வகுமாரைத் தேடிக் கொண்டு அவரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் ரீனா, ரக்சிகா, அலெக்ஸ்பாண்டியன், சிறுவன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செல்வகுமாரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அவரின் உறவினர்கள் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்லாவரம் காவல் நிலையத்தில் செல்வகுமாரின் சகோதரரி தேன்மொழி புகாரளித்தார். அதில் செல்வகுமாரை ரீனா, ரக்சிகா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சிறுவன், அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் வெட்டியதாக குறிப்பிட்டார். அதன்பேரில் 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட சில பிரிவுகளின் கீழ் பல்லாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் சிகிச்சையிலிருந்த செல்வகுமார், நேற்றிரவு உயிரிழந்தார். அதனால் கொலை வழக்காக மாற்றிய பல்லாவரம் போலீஸார், ரீனா, ரக்சிகா ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை வழக்கில் கைதான ரக்சிகா

இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் ரீனா, ரக்சிகா, சிறுவன் ஆகியோரை பிடித்துள்ளோம். இதில் ரீனாவையும் ரக்சிகாவையும் சிறையில் அடைத்துள்ளோம். சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளோம். இந்த வழக்கில் செல்வகுமார், தன்னுடைய முன்னாள் காதலி ரக்சிகாவுக்கும், ரீனாவுக்கும் சொல்ல முடியாதளவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். அதனால்தான் செல்வகுமாரால் பாதிக்கப்பட்ட ரக்சிகாவும் ரீனாவும் சேர்ந்து இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். விருப்பம் போல இவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதன்விளைவு, கொலை வழக்கில் சிக்கி கொண்டார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி ... மேலும் பார்க்க

வேலூர்: கடந்த ஓராண்டில் 184 குட்கா வழக்குகள் - 220 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்!

வேலூர் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாவட்டக் காவல்துறை. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதியான நேற்று முன்தினம்... மேலும் பார்க்க