செய்திகள் :

ஜூ.வி மெகா சர்வே: `கோட்டையைத் தக்கவைப்பாரா சிவசங்கர்?' - அரியலூர், சேலம், நாமக்கல் களம் யாருக்கு?

post image

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் 2026
சட்டமன்றத் தேர்தல் 2026

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.

குன்னம் தொகுதி

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அ.தி.மு.க கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சியைச் சேர்ந்த சரண்யா, நா.த.க-வில் வழக்கறிஞர் கீர்த்திவாசன், த.வெ.க-வில் ரேவதி களத்தில் இருக்கிறார்கள்.

குன்னம்
குன்னம்

சிட்டிங் எம்.எல்.ஏ., எளிமையான அணுகுமுறை உள்ளிட்டவை எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ப்ளஸ். பாரிவேந்தர் களமிறங்கி, மாணவர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தருவது, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிரான பிரசார வியூகம் ஆகியவை சரண்யாவுக்கு ப்ளஸ். அதேசமயம் புதுமுகம், கட்சிக் கட்டமைப்பு இல்லாமை சரண்யாவுக்கு மைனஸ். மற்ற இருவரும் கணிசமாக வாக்குகளைப் பிரிப்பார்கள். அ.தி.மு.க வேட்பாளர் நேரடியாகக் களம் காணாததால், தி.மு.க முந்துகிறது.

இவர்களுடன் பெரம்பலூர் - அரியலூர் - கள்ளக்குறிச்சி - சேலம் - நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளான எடப்பாடி தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி, நாமக்கல் தொகுதியில் ‘ஸ்ரீதேவி’ பி.எஸ்.மோகன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன், வீரபாண்டி தொகுதியில் பாலாஜி சுகுமார் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் களத்தில் இயங்குகின்றனர். பெரம்பலூர் - அரியலூர் - கள்ளக்குறிச்சி - சேலம் - நாமக்கல் தொகுதிகளில் விகடனின் முழு சர்வே ரிப்போர்ட்டைப் பார்க்க க்ளிக் செய்யவும்!

BJP: இன்று ஈரோடு வரும் அமித்ஷா, பயணத் திட்டம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கொளுத்தும் கோடை வெப்பத்தையும் தாண்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் | Photo Album

ஈரோட்டில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்ஈரோட்டில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்ஈரோட்டில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்ஈரோட்டில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்ஈரோட்டில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம்ஈரோட்டில் உதயநிதி தே... மேலும் பார்க்க