செய்திகள் :

"பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 66% வாக்கு கிடைக்கவில்லை தான்; ஆனால், பெண்களின் 100%.." - மோடி

post image

பலத்த எதிர்பார்ப்புகளுடனும், எதிர்ப்புகளுடனும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, பெண்கள் ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் ஆகவில்லை.

இதையடுத்து பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றி உள்ளார்.

மோடி உரையின் முக்கிய சாரம்சம்:

"நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சுயநல அரசியல் பெண்களை இப்போது பாதித்துள்ளது.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் பெண்களின் உரிமையைப் பறித்துவிட்டு, அதற்கு வாழ்த்துகளும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தியாவின் பெண்களின் சக்தியை இவர்கள் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்திய பெண்களுக்கு உண்மை தெரியும்.

இந்த மசோதா ஒரு நேர்மையான முயற்சி ஆகும் மற்றும் இப்போது மிக தேவையான மசோதா ஆகும்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்து சிசுக்கொலை செய்துள்ளன.

பெண்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களது சுய நல ஆட்சி செய்ய முடியாது என்று குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்தியுள்ளன.

இப்போது இந்த மசோதாவிற்கு எங்களால் 66 சதவிகித வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால், பெண்களின் 100 சதவிகித ஆசீர்வாதம் எங்களுக்கு உள்ளது.

பெண்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு தக்க பதிலடி தருவார்கள்".

'என்ன தான் நடக்கிறது?' மீண்டும் ஹார்முஸை மூடிய ஈரான்; என்ன காரணம் சொல்கிறது? ட்ரம்பின் Reaction!

கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு, நேற்று தான் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக அறிவித்தது ஈரான். ஆனால், இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது ஈரான். இதை ஈரானே சொல்லியிருக்கிறது. ஈரான்... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `பிரேமலதாவுக்கு கை கொடுக்குமா விருதாச்சலம்?' - டெல்டா மாவட்டங்கள் யாருக்கு சாதகம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `செங்கோட்டையன் டு வானதி சீனிவாசன்!' - கொங்கு மண்டலம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

பெரம்பூரில் வேகமெடுக்கும் திலகபாமா!

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமா, மற்ற வேட்பாளர்களை விட ஒரு படி முன்னே சென்று களப்பணியில் வேகமெடுத்துள்ளார். களப்பணியில் தான் ஒரு கில்லி என தற்ப... மேலும் பார்க்க

"தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க பார்த்த பாஜக, ஏவல் அடிமைகள் அதிமுக" - ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியைத் தழுவியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "#Delimitation: நண்பர்கள் யார், த... மேலும் பார்க்க