செய்திகள் :

பெரம்பூரில் வேகமெடுக்கும் திலகபாமா!

post image

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திலகபாமா, மற்ற வேட்பாளர்களை விட ஒரு படி முன்னே சென்று களப்பணியில் வேகமெடுத்துள்ளார். களப்பணியில் தான் ஒரு கில்லி என தற்போது மீண்டுமொருமுறை நிரூபித்து வருகிறார்.

பெரம்பூர் தொகுதிக்குள் வரும் போது தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் என முத்திரை குத்தப்பட்ட திலகபாமா தற்போது பெரம்பூர் தொகுதி மக்களின் வீடுகளில் ஒருவராக மாறிப் போயிருக்கிறார். வீட்டு வீட்டுக்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்கும் போது மக்கள் நெகிழ்ந்து போகிறார்கள். காரணம், இதுவரை தங்கள் வீட்டிற்கே வந்து தங்கள் பிரச்சனைகளைக் கேட்கும் காதுகளையும், உள்ளத்தையும் அவர்கள் பார்த்ததே இல்லை என்பதே.

17ந் தேதி திலகபாமாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சறை பெட்டியிலிருந்து அரசியல் – மகளிர் மேடை எனும் நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பறையாட்டம், மைம், மற்றும் நாடகம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, போதைக்கலாச்சாரம் குறித்த தொகுப்பு இடம் பெற்றது. இது பெண்களின் மனதில் மாற்றத்தை நிகழ்த்தியதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மேடைக்குப் பின்புறமிருந்து எதிரணியினர் கல்லெறிந்த சம்பவமும் நடபெற்றது.

நாள்தோறும் வாக்குச் சேகரிப்பிற்காக செல்லும் போது கூட்டணிக் கட்சியின் பகுதி மற்றும் வட்டச் செயலாளர்களின் மாலை மரியாதைகள் தடபுடலாக இருக்கும் . “அதைத் தனக்குச் செய்ய வேண்டாம், நானும் உங்களைப் போலவே சாதாரண மனுஷிதான். மாலைகள், பொன்னாடைகள் வாங்குவதற்கு ஆகும் செலவை பிறருக்கு உதவுவதற்குப் பயன்படுத்துவோம். கேஸ் தட்டுப்பாடு காரணமாக பல ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதைச் சரிசெய்யும் பொருட்டு இப்பணத்தை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் கல்வித் தேவைக்குப் பயன்படுத்துவோம்” என திலகபாமா கூற அனைவரும் அதை உற்சாகமாக வரவேற்று, அங்கேயே தங்களால் இயன்ற தொகையை திலகபாமாவிடம் தர அதை மடிப்பிச்சையாக வாங்கிக் கொண்டார். இந்த அதிரடிப் பேச்சும், செயலும் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பரபரப்பான தேர்தல் பரப்புரையின் போது கூட மற்ற குடும்பத்தின் கஷ்டங்களை உணர ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் எனக் கூறி நெக்குருகிப் போனார்கள்.

என் மக்கள் என் வாக்குறுதிகள் 25 என பெரம்பூர் தொகுதி மக்களுக்காக திலகபாமா அளித்துள்ள 25 வாக்குறுதிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். சிறிய மழைக்கே குளம் போல மாறும் பெரம்பூரின் நிலை மாற்றியமைக்கப்படும். நீர் தேக்கம் இல்லாத ஸ்மார்ட் ட்ரைனேஜ் திட்டம் கொண்டு வரப்படும். முறையான கழிவுநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது முற்றிலும் தடுக்கப்பட்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் உறுதி செய்யப்படும்.

பசுமை பூங்காக்கள் & குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். பழைய குடியிருப்புகளை புதுப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு குப்பைகள் அகற்றப்படும் என்பது உள்ளிட்ட அடிப்படை மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுள்ள 25 வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகாசியில் மதுக்கடை ஒழிப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் திலகபாமா. இதை ராமதாசும், அன்புமணியும் பல மேடைகளில் பெருமையாக குறிப்பிட்டள்ளனர். இந்தத் தகவல் தொகுதி மக்களுக்குத் தெரியவர “தங்கள் தொகுதியில் பெரிய பிரச்சனையாக மது இருக்கிறது. 24 மணி நேரமும் மதுபானக்கடை இயங்கி வருகிறது. நீங்கள் எம்.எல்.ஏ.,வானால் இதற்கு தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

மறுநாள் அதிகாலையிலேயே 24 மணி நேரமும் இயங்கி வந்த மதுபானக் கடையை முற்றுகையிட்டு, போலீசாரை வரவழைத்து மதுபானங்களை கைப்பற்ற வைத்து தொகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார் திலகபாமா.

இரண்டு முறை சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ள ஆர்.டி.சேகர் ஒருபுறம், முதலமைச்சர் கனவில் போட்டியிடும் நடிகர் விஜய் ஒருபுறம் என களம் கடுமையான போட்டியில் களம் தகிக்க, மிகக் கூலாக கையாளுகிறார் திலகபாமா. அதற்கு காரணம் இல்லாமலில்லை. “இரண்டு முறை எம்.எல்.ஏ.,வா ஆகுறதுக்கான வாய்ப்பை மக்கள் சேகருக்கு குடுத்தும் அதை அவர் சரியாப் பயன்படுத்தல.

தொகுதி பக்கம் வர்றதும் இல்ல. மக்களோட பிரச்சனை என்னனு கேக்குறதோ, அதுக்கு தீர்வு கொண்டு வரனுங்கிற எண்ணமோ அவர்கிட்ட துளிகூட கிடையாது. தினமும் நான் பல தெருக்களுக்கு பரப்புரைக்காக போகும் போது கூட தொண்டர்கள் தான், அங்கங்க இருக்காங்களே தவிர சேகர பாக்க முடியறதில்ல. இதவிடக் கொடும என்னனா, தொகுதியில சேகர் பெயரை சொன்னாலோ, எம்.எல்.ஏ பேரு என்னானு கேட்டாலோ பல மக்களுக்கு தெரியறதில்ல” என்கிறார் திலகபாமா.

“விஜய் ஒரு நடிகர்ங்கிறத தாண்டி, சொல்றதுக்கு என்ன இருக்கு. கட்சி ஆரம்பிச்சு இந்த இரண்டாண்டு களத்துல அவர் ஆற்றிய களப்பணி என்ன? தன்னுடைய ஸ்டார் இமேஜை வச்சு அவர் செய்த நற்பணிகள் என்ன? சிறுபான்மை ஓட்டுகள் எளிமையா கிடைச்சிடும். அதனால தான் அவர் இங்கேயும், திருச்சி கிழக்குலயும் போட்டியிடுறார்னு சொல்றாங்க. மக்கள எந்தளவுக்கு முட்டாள்களா நினைச்சிருந்தா இப்படி ஒரு ஸ்டேட்டஜி எடுத்திருப்பாரு.

விஜய் வார வாரம் சர்ச்சுக்கு போயிருக்காரா? பைபிள் வாசிச்சிருக்காரா? இல்ல அதன்படிதான் நடந்திருக்காரா? இவர் பேர்ல ஜோசப்னு இருக்கிறதால கிறிஸ்தவ மக்கள் இவருக்கு ஓட்டுப் போட்டுடுவாங்களா? அந்தளவிற்கு கிறிஸ்தவ மக்கள் தரம் தாழ்ந்திடல.

பெரிய ஸ்டாரோட படம் தியேட்டருக்கு வருதுனா முதல் தடவ பாக்கும் போது ஆர்வமா இருக்கும். அந்தப் படம் நல்லா இருந்தா ஓடிடில வரும் போது இன்னொரு தடவ பாப்பாங்க. இல்லனா டிவில போடும் போது பாப்பாங்க. சும்மா போயி பாத்துட்டே இருக்க மாட்டாங்க.

அந்த இடத்துல தான் விஜய் இருக்காரு.” என தனது சக போட்டியாளர்களின் கள(ல)வர நிலவரத்தைக் குறித்துப் பேசியவர் “மக்களை நம்பி, நான் களத்தில் இறங்கிருக்கேன். அவங்க என்னை நம்புறாங்க. அந்த நம்பிக்கையை காப்பாத்துற விதமா அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நண்பர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைச்சிட்டு இருக்காங்க. அந்த உழைப்பும், மக்களின் நம்பிக்கையும் வீண்போகாது” என்கிறார் திலகபாமா.

பெரும் மலையையும், சிறு உளி உடைக்கும். பெரம்பூர், யார் கோட்டையாக இருந்தால் என்ன, யார் போட்டியிட்டால் என்ன, பெரம்பூர் இனி திலகபாமாவின் வசம்தான் என்ற நம்பிக்கையுடன், தேர்தல் நாளுக்காக காத்திருக்கின்றனர் தொகுதி மக்கள்.

'என்ன தான் நடக்கிறது?' மீண்டும் ஹார்முஸை மூடிய ஈரான்; என்ன காரணம் சொல்கிறது? ட்ரம்பின் Reaction!

கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு, நேற்று தான் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக அறிவித்தது ஈரான். ஆனால், இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது ஈரான். இதை ஈரானே சொல்லியிருக்கிறது. ஈரான்... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `பிரேமலதாவுக்கு கை கொடுக்குமா விருதாச்சலம்?' - டெல்டா மாவட்டங்கள் யாருக்கு சாதகம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `செங்கோட்டையன் டு வானதி சீனிவாசன்!' - கொங்கு மண்டலம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

"தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க பார்த்த பாஜக, ஏவல் அடிமைகள் அதிமுக" - ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியைத் தழுவியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "#Delimitation: நண்பர்கள் யார், த... மேலும் பார்க்க