திருப்பரங்குன்றம்: வேலி அமைக்கலாம்; தர்காவின் அனைத்து பக்கங்களிலும் விளக்கேற்றங்...
'தங்க சேமிப்பிற்கு Gold Coin வாங்காதீங்க' - 6% தொகை வீணாகிறது; 'இது' தான் புத்திசாலித்தனம்!
இன்று பலரும் 'தங்கம் நாணயங்கள்' வாங்கி தங்கச் சேமிப்பை மேற்கொள்கின்றனர். தங்க நகை வாங்கினால்தானே, 'அவுட் ஆஃப் பேஷன்', செய்கூலி, சேதாரம் போன்ற பிரச்னைகள் வரும்.
இதுவே தங்க நாணயம் வாங்கிவிட்டால் வேண்டும்போது, தேவையான நகையாக மாற்றிக்கொள்ளலாம் என்கிற எண்ணம் மக்களிடம் பரவலாக உள்ளது.
ஆனால், தங்க நாணயம் வாங்குவதும் அவ்வளவு நல்ல ஆப்ஷன் இல்லை என்கிறார் ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன்.

"தங்க நாணயம் வாங்குவது பொறுத்தவரை, பெரிய கார்பரேட் கடைகளில் நாணயத்திற்கு 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை செய்கூலியும், 3% ஜி.எஸ்.டியும் சேர்த்து மொத்தம் 6 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இது தெரியாமல் நாணயமாக வாங்கிச் சேர்த்து, 20-30 கிராம் சேர்ந்ததும் நகையாகச் செய்கிறார்கள்.
தங்க நாணயம் வாங்குவதற்குப் பதிலாக 24 கேரட் (பார் அல்லது பிஸ்கட்) தங்கமாக வாங்கினால், செய்கூலி இல்லாமல் ஜி.எஸ்.டி மட்டும் இருக்கும். 6 சதவீத இழப்பையும் தவிர்க்கலாம்.
அது போல, வேண்டும்போது என்ன தேவையோ அதற்கேற்ப நகை செய்துகொள்ளலாம்"



















