செய்திகள் :

தமிழ்நாடு மின்வாரியத்தில் முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் மிஸ்ஸிங்! - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

post image

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் கடந்த மே 16, 17-ம் தேதிகளில் கிட்டத்தட்ட 18 ஹார்டு டிஸ்குகளட்திருடு போனது.

இது குறித்து தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுக் குறித்து சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்...

"தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலவலகத்தில் பல ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக போன மாதம் ரிப்போர்ட் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

அதனால், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருக்கும் விஜிலென்ஸ் முதல் கட்டமாக விசாரணை நடத்தினர். அதன் பின், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு சிலரை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் நான் பேசினால் சரியாக இருக்காது.

தலைமை அலுவலகத்தில் தற்போது உள்ள அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்து டேட்டாக்கள், சென்சிட்டிவ் தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பேக் அப் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகால டெண்டர், ஆவணங்கள், கான்ட்ராக்ட் ஊழியர்கள், நிலக்கரி வாங்கியது என அனைத்து தரவுகளுமே பேக் அப் எடுக்கக் கூறப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் குறித்த ஆவணங்களை ஏற்கெனவே சி.பி.ஐக்கு கொடுத்துவிட்டோம். இதன் தொடர்ச்சியாக, சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.

அந்தச் சஸ்பெண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திருட்டு நடந்திருக்கோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அனைத்தையுமே காவல் துறை விசாரித்து வருகிறார்கள்". என்றார்.

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெறத் தடை; ஏன் தெரியுமா?

அஸ்ஸாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெற தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்த சனிக்கிழமை (ஜூன் 13), அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.என்ன அறிவ... மேலும் பார்க்க