செய்திகள் :

தவெக:``5 மொழி பேசுவேன்... அரசியலில் இருப்பதாக கற்பனையில் இருந்தேன்" - இளம் அமைச்சர் கீர்த்தனா யார்?

post image

தனது 29-வது வயதிலேயே, நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகத்தின்' மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் எஸ். கீர்த்தனா. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அரசியலில் அக்கட்சியின் புதிய முகங்களில் ஒருவராகவும், கவனிக்கப்படுபவராகவும் இருக்கிறார்.

யார் இந்த எஸ். கீர்த்தனா?

1996-ம் ஆண்டு விருதுநகரில் பிறந்த கீர்த்தனா, தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் (B.Sc), பின்னர் 2019-ம் ஆண்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுகலைப் பட்டத்தையும் (M.Sc) அவர் பெற்றார்.

தவெக அமைச்சர் கீர்த்தனா
தவெக அமைச்சர் கீர்த்தனா

முழுநேர அரசியலில் நுழைவதற்கு முன்பு, கீர்த்தனா 'Showtime Consulting' மற்றும் 'IPAC' ஆகிய நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராகவும், டிஜிட்டல் தேர்தல் பிரச்சார வியூக குழுவில் பணியாற்றினார். மேலும், தெலுங்கு தேசம் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களின் வியூக குழுவில் முக்கியப் பங்காற்றினார்.

கடந்த சில ஆண்டுகளாக, முன்னாள் முதலமைச்சர்களான மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் தற்போதைய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் அவர் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்கிறார்கள். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில், ``ஒரு அரசியல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றியது, ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசு எந்திரத்தின் செயல்பாடு குறித்து ஆழமான புரிதலைத் எனக்கு வழங்கியது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதனால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுவதற்கும், மக்களுடன் இன்னும் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் எனக்கு பெரிதும் உதவியது. இந்தியா முழுவதும் உள்ள அதிகமான மக்கள் நடிகர் விஜயின் செய்தியைப் புரிந்துகொள்ளவும், அதனுடன் தங்களை இணைத்துக்கொள்ளவும் ஏதுவாகவே தான் இந்தியில் பேசிவருகிறேன். நான் எப்போதும் என்னை அரசியலில் இருப்பதாகவே கற்பனை செய்து வந்தேன். அதனால்தான் ஒரு அரசியல் வியூக வகுப்பாளராக எனது பணிவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன்.

தவெக அமைச்சர் கீர்த்தனா
தவெக அமைச்சர் கீர்த்தனா

நான் பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். அதன் மூலம் அரசியல் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், நிர்வாக எந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் நன்கு புரிந்துகொண்டேன். த.வெ.க என்பது அனைவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரு இடமாகும். எனக்கு அரசியல் பின்னணியோ அல்லது பணபலமோ இல்லாவிட்டாலும், அங்கே எனக்கு இடமுண்டு. மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், உங்களை த.வெ.க-வுக்கு வரவேற்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

2026-ம் ஆண்டு நடைபெற்ற சிவகாசி சட்டமன்றத் தேர்தலில், கீர்த்தனா 68,709 வாக்குகளைப் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜி. அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடம்: அரசியல் கட்சிகளின் விமர்சனமும் தவெக அரசின் விளக்கமும்!

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு பதவியேற்ற நிகழ்வில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையாக வெடித்தது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப... மேலும் பார்க்க

`சட்டமன்றக் கட்சித் தலைவர் உதயநிதி' - துணை தலைவர், கொறடா யார்? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த மே 7-ஆம் தேதி மாலை 5:30 மணியள... மேலும் பார்க்க

500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவசம் தொடருமா? - தமிழக அரசு விளக்கம்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (10.05.2026) நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய ... மேலும் பார்க்க

பொலிட்டிக்கல் ஸ்ட்ராட்டஜிஸ்ட் `டு' அமைச்சர் - தவெக ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம் ஒரு பார்வை!

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட 43 வயது ஆதவ் அர்ஜுனா, தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கோவையைச் சேர்... மேலும் பார்க்க

`அப்பாவை அரசியலுக்கு வராதனு சொன்னார் எம்.ஜி.ஆர்; விஜய் சார் என்னை அரசியலுக்கு வரவச்சிட்டார்'- தினேஷ்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில், சமீபத்தில் தவெகவில் சேர்ந்த நடிகர் தினேஷிடம் பேசினோம்.``’நண்பன்’, ‘காவலன்’ படங்கள் வெளியான சமயங்களில் விஜய் டிவியில் டைரக்‌ஷன... மேலும் பார்க்க