செய்திகள் :

திருநாவுக்கரசர் மகனை சாய்த்த விஜய் ரசிகர்; அறந்தாங்கியில் அதிர்ந்த `விசில்' - யார் இந்த பர்வேஸ்?

post image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்ட த.வெ.க புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளர் ஜ.முகமது பர்வேஸ் 10,062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் ராமச்சந்திரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜாபர் அலி அ.தி.மு.கவின் வர்த்தக அணி இணைச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர்.

இவரது மகன் முகமது பர்வேஸ். சட்டம் படித்துள்ள முகமது பர்வேஸ். சிறு வயதில் இருந்தே விஜய் மீது கொண்ட அன்பு காரணமாக விஜய் ரசிகராக இருந்து வந்துள்ளார்.

விஜய் படம் ரிலீஸ் என்றால் தன்னுடைய ஆதராவளர்கள் சிலரை திரட்டி புதுக்கோட்டையையே அதகளப்படுத்திவிடுவார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனே இவரும் தேர்தல் களத்தை நோக்கி பணி செய்ய ஆரம்பித்துவிட்டார்.

முதலில் கட்சியாக இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கியபோது, விஜயின் ஆணைக்கினங்க முதல் ஆளாக பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தார். வனவிலங்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியை சீரமைப்ப்பது, விஜய் படிப்பகம், விலையில்லா விருந்தகம் என பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்து அதை தொடர்ந்தும் வருகிறார்.

குறிப்பாக, புதுக்கோட்டை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவிலேயே நலதிட்ட உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தலில் நின்று அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக மாறி விஜயின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இந்த நிலையில் தான் இந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாலும், அறந்தாங்கியில் இன்னும் கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதால் அறந்தாங்கி தொகுதி பர்வேஸ்க்கு ஒதுக்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் சிலரை நேரடியாகவே மிரட்டுகிறார் என்றெல்லாம் பர்வேஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், அதையெல்லாம், தவுடுபொடியாக்கி வெற்றிக் கனியை பெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் தான் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். ராமச்சந்திரன் மீதான அதிருப்தி, மத அடையாளம் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், வேட்பாளர் அறிவிப்பு வந்த உடனே பர்வேஸ் களத்தில் இறங்கி பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

கடற்கரை தொடங்கி நகரம் முழுவதும் செய்த சூராவளி பிரச்சாரமும், விஜயின் பிம்பமும் பர்வேஸின் வெற்றிக்கு வழிவகை செய்திருக்கிறது..

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க