செய்திகள் :

தென்காசி: உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை; சிகிச்சையளித்து தேற்றும் வனத்துறை!

post image

தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றிச் சுற்றித் திரிந்த 35 வயதுடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தடுமாறி நடமாடி, பின்னர் ஓர் இடத்தில் படுத்துக்கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது. அத்துடன், யானையின் சாணம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அந்த யானை தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் படுத்திருந்தது கண்டறியப்பட்டது. திருநெல்வேலி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஆனந்த் உத்தரவின் பேரில், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

காட்டு யானைக்கு சிகிச்சை
காட்டு யானைக்கு சிகிச்சை

தென்காசி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் முனைவர் ராஜ்மோகன் முன்னிலையில், திருநெல்வேலி வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் மற்றும் டாக்டர் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். வனப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், மருத்துவக் குழுவினர் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளித்து, அதன் உடல்நிலையைச் சீராக்கினர். யானைக்கு நீர்ச்சத்து குறைபாடு, உணவு உட்கொள்ளாமை மற்றும் பலவீனம் ஆகியவை இருந்ததால், தொடர்ச்சியான திரவ ஊசிகள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. யானையின் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

காட்டு யானைக்கு சிகிச்சை
காட்டு யானைக்கு சிகிச்சை

தற்போது, யானை நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தானாகவே எழுந்து நடமாடத் தொடங்கியுள்ளது. உணவு உட்கொள்ளவும் தொடங்கியுள்ள இந்த யானை, வனத்துறையினரால் பாதுகாப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக நலம் பெற்ற பின்னர், இயற்கையான வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை மீட்க வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மனித வாழ்விடங்களுக்கு அருகே இருந்த இந்த யானையை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்து மீட்டது வனத்துறையின் திறமையான பணியாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் - வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமல... மேலும் பார்க்க

நெல்லை: `டீ குடிக்கச் சென்றவரை தாக்கிய கரடி' - குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்; மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதிய... மேலும் பார்க்க

அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம்' - என்ன சிறப்பு?

நாட்டிலேயே முதன்முறையாக குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கென சிறப்பு மையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது 2 ஆண்டுகளா... மேலும் பார்க்க

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோ... மேலும் பார்க்க

மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

பாம்பு மகுடி இசைக்கு மயங்கி ஆடும் காட்சியை நாம் பல திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளால் உண்மையிலேயே மனிதர்களைப் போல ஒலியைக் கேட்க முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல... மேலும் பார்க்க