செய்திகள் :

தேர்தல் முடிவுகள்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 74 இடங்களுடன் திமுக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவிய ஸ்டாலின், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், மக்களாட்சியில் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழக மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து இன்று காலை ஜனநாயக மரபுப்படி தன் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருக்கிறார். மு.க. ஸ்டாலினின் இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க