'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இ...
நாடாளுமன்ற உரை: "கூட்டணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்; ஆனால்" - எம்பி கமல்ஹாசன்
பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், அது குறித்து வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "அவர் பேசியது புரியவே இல்லை. அதனால்தான் கோவை மக்கள் அவரைத் திருப்பி அனுப்பினார்கள்" எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பா.ஜ.க-வினர் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கமல்ஹாசன், ``தமிழனாக நான் நல்ல கருத்துப் பேசிவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

அதை மறுப்பவர்கள் அதை விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு, இப்படித்தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும்.
எங்களின் கட்சிகளுடன் அல்ல... மொத்த இந்தியாவுடன். இந்தியாதான் என்னுடைய நலன், உங்களுடைய நலனும் கூட. கூட்டணி எல்லாம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். ஆனால், கொள்கைதான் முக்கியம். அதை நோக்கித்தான் என் பயணம். என் பேச்சு புரியவில்லை என்பவர்களுக்கு பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். அதுதான் இப்போது விமர்சிப்பவர்களுக்கும்" என்றார்.
















