பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
``நாளையுடன் உலகம் அழியப்போகிறது" - தீவிரமாக கப்பல் கட்டும் எபோநோவா?: யார் இவர்? என்ன சொல்கிறார்?
இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் - நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம்பவம் முடியும்.
தற்போது ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை தீர்க்கதரிசி என அழைத்துக்கொள்கிறார். தன்னை நோவானின் மகன் எனப் பொருள்படும்படியான் எபோநோவா என அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர், டிசம்பர் 25 அன்று மீண்டும் இறைவன் மனிதகுலத்தை அழிக்க முடிவு செய்திருப்பதாகவும், நல்லவர்களை காப்பாற்ற பத்து பெரும் பேழைகளை செய்யக் கட்டளையிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பிரசாரம் செய்துவருகிறார்.

'பூமியை மூழ்கடிக்கப் போகும் பைபிள் கால வெள்ளத்திலிருந்து மனிதர்களையும் அனைத்து விலங்கினங்களையும் காப்பாற்றுவதற்காக, நோவாவின் பணியைத் திரும்பச் செய்யும்படி கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" எனக் கூறுகிறார்.
அவரின் சமூக ஊடகப் பக்கத்தைப் கவனித்தால் அவர் கோணித்துணியை உடையாக அணிந்து, ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் செல்போனுமாக வலம் வருகிறார். அவர் கானா நாட்டில் இருக்கிறார் என்பது செய்திகளின் மூலம் அறியமுடிகிறதே தவிர, அவர் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்பதற்கான எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.
பெரும்பாலான வீடியோகளில் அவர் கப்பல் கட்டுவது தொடர்பாகவும், அதைப் பார்வையிடுவது தொடர்பாகவும் பேசுகிறார். அவரின் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் டிசம்பர் 25 முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் பெருமழைப் பெய்யும், அதைத் தொடர்ந்து உலகம் மூன்று வருடம் வெள்ளத்தால் மூழ்கும் எனக் கூறுகிறார். 25-ம் தேதி நெருங்கி வருகிறது விருப்பம் இருப்பவர்கள் இப்போதே வரலாம் என்கிறார். மேலும், அவருடைய ஆதவராளர்கள் சிலர் அவரையும், அவர் கப்பலையும் புகழ்ந்து பேசும் வீடியோகளும் அவர் வலைதளங்களில் பதிவாகியிருக்கிறது.

சில வீடியோகளில் அந்தப் பேழையை நோக்கி சில ஆடுகளும், கோழிகளும், பூனைகளும் வருவதாக காட்சிப்படுத்தப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அவை அங்கு இயல்பாக சுற்றும் விலங்குகள் என கமெண்ட் பகுதியில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் எபோ நோவாவை போலி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இவரை ஆதரிப்பவர்கள் அளிக்கும் நன்கொடையிலேயே இவ்வளவு பெரிய கப்பல்களைக் கட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதரப்பூர்வமான எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

















