செய்திகள் :

'நீ போ மோனே விஜயா' ... 'டேஷ் மோனே ரேவந்தா' - பினராயி விஜயன் Vs ரேவந்த் ரெட்டி; முதல்வர்கள் மோதல்!

post image

கேரள மாநிலம் ,திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.சபரிநாதனுக்கு ஆதரவாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரோடு ஷோ நடத்தினார். அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் பேசிய 'மோனே தினேஷா' என்ற வசனத்தைப் போன்று முதல்வர் பினராயி விஜயனை ஒருமையில் பேசியிருந்தார். ரேவந்த் ரெட்டி பேசியபோது, "பினராயி விஜயனின் எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டது. 'நீ போ மோனே விஜயா', கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் ஆட்சிக்கு வரும்" என்று பினராயி விஜயனை விமர்சித்திருந்தார். அதன் பின்னர், தெலங்கானாவின் வளர்ச்சி குறித்து விவாதிக்க கேரள முதல்வர் ​பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்து ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்திலும் 'நீ போ மோனே விஜயா' என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தியிருந்தார். அதுமட்டும் அல்லாது, காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானாவில் நடந்த வளர்ச்சியையும், கேரளாவில் சி.பி.எம் ஆட்சியில் நடந்த வளர்ச்சியையும் நேரடியாக ஒப்பீடு செய்ய தயாராக இருப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெலங்கானா ​முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான்கு பக்க கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதில், "டியர் ஸ்ரீ ரேவந்த் ரெட்டி, சம்பளமும் ஓய்வூதியமும் தொடர்ச்சியாக கொடுக்கமுடியாமல் திணறும் ஒரு அரசை வழிநடத்தும் முதல்வரிடமிருந்து கேரளம் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. மக்கள் நலத்திட்டங்களின் முன்மாதிரிகளை கற்று தெரிந்துகொள்ளுமாறு தெலங்கானா முதல்வரை கேரளாவிற்கு வரவேற்கிறேன். நவ கேரளத்தின் உருவாக்கத்தின் மூலம் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து முன்னேறிச் செல்வோம்" என்று மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் கடிதம் எழுதியிருந்தார் பினராயி விஜயன்.

ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அறிக்கை

இதற்கிடையே கண்ணூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்களுக்கு பதிலளித்து பேசிய பினராயி விஜயன், "ரேவந்த் ரெட்டி வெளிப்படையாக கேள்வி எழுப்பியுள்ள நிலையில், நானும் வெளிப்படையாக பதில் அளிக்க உள்ளேன். நான் விரிவாக இப்போது பேசவில்லை. ஆனாலும், ரேவந்த் ரெட்டியிடம் 'டேஸ் மோனே ரேவந்தா இதோ பதில் வருகிறது' என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்" என்றார். கேரள மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் முதல்வர்கள் ஒருமையில் பேசி அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

`திரைமறைவு முயற்சிகள் தோல்வி; விஷமத்தனமாகப் பேசும் விஜய்' - காங்கிரஸ் பதிலடி!

நான்கு முனை போட்டியால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று நெல்லையில் தமி... மேலும் பார்க்க

திமுக ஐடி விங் தொடர்பு; மா., செ-வுக்கு கல்தா - தனி ட்ராக்கில் விருதுநகர் மாவட்ட தவெக வேட்பாளர்கள்?

எடப்பாடி தொகுதியில் தவெக-வின் அதிகாரபூர்வ‌ வேட்பாளர் மற்றும் அவருடைய மாற்று வேட்பாளர் இருவரது வேட்புமனுக்களுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.'இப்படி நடக்கறது புதுசா என்ன, மேலிடங்களின் அன்டர் டீலிங் இதெல்ல... மேலும் பார்க்க

`20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு; கடத்தல் மிரட்டல்; திட்டமிட்ட சதி'- த.வா.க வேல்முருகன் குற்றச்சாட்டு

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக - திமுக என இரு கூட்டணியையும் புறக்கணித்து, தனித்துக் களம் காண்கிறது. அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக வ... மேலும் பார்க்க

`கண் முன் ட்ரோன் தாக்குதல்கள்; பதுங்க பேஸ்மென்ட் ஏரியா!' - ஈரான் போர் அனுபவம் பகிரும் தமிழர்

சென்னை கோடம்பாக்கத்தில் 'அக்கா கடை' என்கிற பெயரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் காளிராஜன் . சிவகாசியைச் சேர்ந்த இவர், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து சிறிய அளவில் அந்த மளிகைக் கடையைத் தொட... மேலும் பார்க்க

மெட்ரோ அரசியல்: 'மக்கள் வரிப்பணமும் டெல்லியின் மிரட்டலும்' - விளாசும் பி.டி.ஆர்

பா.ஜ.க வேட்பாளார்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மத்திய அமைச்சர்களும், சில மாநில முதல்வர்களும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் போட்டிய... மேலும் பார்க்க

திருவொற்றியூர் அ.தி.மு.க பிரசாரத்தில் கைகலப்பு - வேட்பாளர் மகன் மீது சரமாரி குற்றச்சாட்டு

சென்னை திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் அ.தி.மு.க மாணவர் அணியில் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் குப்பன... மேலும் பார்க்க