பாலியல் சித்ரவதை: இரண்டரை வயது பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம் -சிக்கிய ...
"பாஜக-விற்கு இது தார்மீக மரண தண்டனை"- அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை குறித்து அகிலேஷ் யாதவ்
மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுதலை ஆகியிருக்கிறார்.
மேலும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கே.கவிதா உள்ளிட்ட 23 பேரும் ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், " அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். இன்று நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. உண்மை வென்றது!" என உடைந்து அழுது பேசியிருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியிருக்கிறார்.
"உண்மையும், நீதியும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணையாக நின்றிருக்கிறது.
பாஜகவிற்கு இது தார்மீக மரணதண்டனை ஆகும். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பு நாட்டின் எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களைச் சுட்டிக்காட்டி கொடுப்பதைத் தொழிலாகக்கொண்டு இருந்தவர்கள் தான் இந்த பாஜக சிந்தாத்ந்தவாதிகள்" என்று விமர்சித்திருக்கிறார்.

















