செய்திகள் :

AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

post image

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது.

தாய் கிழவி
தாய் கிழவி

திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், " நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், " நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான்" என்று கூறியிருக்கிறார்.

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) ப... மேலும் பார்க்க

தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை ... மேலும் பார்க்க

தாய் கிழவி : "சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு"- ஜோதிகா பாராட்டு

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில் விங்ஸ்' சுவாரஸ்யம்

இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந... மேலும் பார்க்க

"ஒவ்வொரு வீட்டிலும் ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்" - நடிகர் ஆரி உருக்கம்

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ள... மேலும் பார்க்க