செய்திகள் :

தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?

post image

தூக்கம் வரலையா...  அதுக்கொரு கம்மீஸ்...

முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்...

ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு....

இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gummies ). மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இவை இனிப்பாக, மிட்டாய் மாதிரி, குறிப்பாக, ஜெல்லி மிட்டாய் போன்று விதம்விதமான சுவைகளில் கிடைப்பதால், பலரிடமும் இதற்கு வரவேற்பு கூடிக்கொண்டிருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல், அதைச் சிரமமாக உணரும் பெரியவர்கள் வரை பலரும் கம்மீஸை மறுப்பு சொல்லாமல் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.

கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்
கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்

உண்மையில் கம்மீஸ் என்பவை ஆரோக்கியமானவைதானா... அவற்றை எல்லாப் பிரச்னைகளுக்கும் எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... பக்க விளைவுகள் இருக்குமா...?

விரிவாகப் பேசுகிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

''கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. பீட்ரூட் எக்ஸ்ட்ராக்ட் (Beetroot extract), மஞ்சள், கேரட் ஜூஸ் அல்லது பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கை சாறுகள் சேர்க்கப்பட்டும், 'Yellow 5', 'B1' போன்ற செயற்கை நிறங்களும், செயற்கையான ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சு சுவைகளும் சேர்க்கப்பட்டும் இரண்டு விதமாக விற்பனைக்கு வருகின்றன.

மல்டி வைட்டமின், வைட்டமின் சி, வைட்டமின் டி போன்ற சத்துகளுக்கான கம்மீஸ்,  முடி, சருமம் மற்றும் நகங்களுக்கான பயோட்டின் (Biotin), கொலாஜென் (Collagen) கம்மீஸ், ஒமேகா 3 (Omega 3), புரோபயாடிக் (Probiotic), இரும்புச்சத்து (Iron), கால்சியம் கம்மீஸ், தூக்கத்திற்காக மெலடோனின் (Melatonin) கம்மீஸ் என  மார்க்கெட்டில்   பலவிதமான கம்மீஸ் கிடைக்கின்றன

கம்மீஸ் என்பவை இயற்கை நிறங்கள் கொண்டவை, செயற்கை நிறங்கள் கொண்டவை என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன.

கம்மீஸ் எடுத்துக்கொள்வதென முடிவு செய்வோர், அதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு கம்மியில் 3 கிராமுக்கும் குறைவாகவே சர்க்கரை இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மிகுந்த கவனத்துடன், கம்மீஸில் உள்ள சர்க்கரை அளவைச் சரிபார்த்து எடுக்க வேண்டும். கம்மீஸில்  மறைமுக கலோரிகள் (Hidden calories) இருக்கலாம்.  தவிர, சுகர்ஃப்ரீ என்று லேபிளில் (Sugar-free)  குறிப்பிட்டிருந்தாலும், அதில் மால்டிடால் (Maltitol) அல்லது சார்பிட்டால் (Sorbitol) போன்ற மறைமுக இனிப்புகள் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இவற்றை கவனித்துப் பயன்படுத்த வேண்டும்.

மாத்திரை விழுங்க சிரமப்படுபவர்கள், குறிப்பாக, பெரிய அளவு மாத்திரைகளை விழுங்க முடியாதவர்களுக்கு கம்மீஸ் (Gummies) சிறந்த மாற்றாகத் தெரியலாம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு விழுங்குவது எளிது என்பதால் கம்மீஸ் எடுத்துக்கொள்ள விரும்பலாம். எனினும் இவர்களுக்குக் கொடுக்கும் முன் மருத்துவரின் (Pediatrician) ஆலோசனையைப் பெறுவது அவசியம். சர்க்கரைநோய், பிசிஓஎஸ் (PCOS), உடல் பருமன் (Obesity), கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கம்மீஸ் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணத்தில் பலரும் அதற்கான ஹேர் கம்மீஸ் (Hair Gummies) பயன்படுத்துகிறார்கள். ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது.

ஹேர் கம்மீஸில் பயோட்டின், கொலாஜன், ஜிங்க் மற்றும் வைட்டமின் C இருந்தாலும், அதை மட்டும் சாப்பிடுவதால் முடி உதிர்வு நின்றுவிடாது.

சரியான உணவை (கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், மினரல்ஸ்) உட்கொள்ள வேண்டும். உடலில் ஹீமோகுளோபின், வைட்டமின் டி, பி12 அல்லது புரதச்சத்து குறைவாக இருந்தால், வெறும் கம்மீஸ் எடுத்துக்கொள்வதால் மட்டும் பெரிய மாற்றம் ஏற்படாது.

கம்மீஸ் வாங்கும் போது, அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளின் அளவு, ஊட்டச்சத்தின் அளவு, எடுத்துக்கொள்ள வேண்டிய டோசேஜ், சைவம் அல்லது அசைவம் என  எதிலிருந்து தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி (Expiry date) போன்றவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.  அதிக சர்க்கரை உள்ள கம்மீஸ் பற்சிதைவை (Cavity) உண்டாக்கும். எனவே,  அவற்றைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்'' என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?

Doctor Vikatan:வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிட... மேலும் பார்க்க

மேகாலயாவில் அதிகரித்த HIV பாதிப்பு; அதிர்ச்சிக்குள்ளாக்கும் புள்ளி விவரம்! - அமைச்சர் சொல்வதென்ன?

மேகாலயாவில் வெளியாகியிருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை தரவு, அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக ஹெச்.ஐ.வி பாதிப்பு கொண்ட மாநிலமாக மேகாலயா இருக்கிறது. இது தொடர்பாக மேகால... மேலும் பார்க்க

Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மரு... மேலும் பார்க்க

Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!

வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவே... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம்.சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்க... மேலும் பார்க்க