கறிக்கோழி: `40,000 விவசாயிகள், 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதார விவகாரம்'- வெளிநட...
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் உயிர் பிரிந்ததாகத் தெரிய வருகிறது,
ஆந்திராவின் குண்டூர் அருகே பிறந்த ஜானகி, சினிமாவில் பாடத் தொடங்கியதும் சென்னைக்கு குடி வந்தார். பிறகு ராம் பிரசாத் என்பவரை மணந்தார்.
இந்த தம்பதிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன். சில படங்களில் நடித்திருக்கும் முரளி, ஐதராபாத்தில் வசித்து வந்தார். முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது.

முரளி – உமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆனால் பிரச்னைகள் காரணமாக இந்த தம்பதியிடையே விவாகரத்து ஆகி விட்டது. மகள்கள் இருவருக்கும் திருமணம் முடித்து கொடுத்து விட்டார் உமா.
முரளி தன் அம்மாவுடன் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக முரளி காலமாகி விட்டார்.
எஸ்.ஜானகிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.


















