செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

post image

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது.

இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட இந்தப் பொங்கல் பரிசு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் கிராமத்திலும் பொங்கல் தொகுப்பு வழங்கிய போது முதியவர்களின் பணத்தில் தலா ரூ.500 எடுத்துக் கொண்டு ரூ.2500 மட்டும் வழங்கியதாக அதிகாரிகளுக்குத் தகவல் போனது.

அதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி அருகில் உள்ள ராஜேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (வயது: 30) 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூத்தாடிவயல் அங்காடி விற்பனையாளராகப் பணிக்கு வந்துள்ளார்.

pudukkotai
pudukkotai

இவர்தான் தற்போது தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் முதியோர்களைத் தேர்ந்தெடுத்து 12 பேரிடம் கைரேகை பதிவு செய்து கொண்டு தலா ரூ.500 பிடித்துக் கொண்டு ரூ.2500 மட்டும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்யத் தொடங்கினர். மற்றொருபுறம், பணத்தை எடுத்தவர்களின் வீடு தேடிச் சென்று எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதிகாரிகள் விசாரணைக்கு வந்தால் பணம் எடுக்கவில்லை முழுத் தொகையும் கொடுத்துவிட்டதாகக் கூறச் சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர் ஒருவர் முதியவர்களை ஏமாற்றி அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் தலா ரூ. 500 யை எடுத்துக்கொண்ட விவகாரம், அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார்மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந... மேலும் பார்க்க

திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோத... மேலும் பார்க்க

தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வ... மேலும் பார்க்க

`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப... மேலும் பார்க்க

கரூர்: மதுபோதையில் பேருந்தை இயக்கிய டிரைவர்; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவர், நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆக... மேலும் பார்க்க