செய்திகள் :

பொசிஷனிங் டு கூட்டணி... விஜய்யின் வெற்றிக்கு காரணமான அந்த இருவர்! - எப்படி சாதித்தது தவெக?

post image

நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று சாதித்திருக்கிறது. விஜய்யின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இரண்டு பேர் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்திருப்பதாக தவெக முகாமில் பரவலாக பேசுகின்றனர்.

Vijay
Vijay

கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் வகுத்த வியூகங்களும் அவர்களின் சமயோஜித திட்டங்களும்தான் தவெகவை வெல்ல வைத்ததாகக் கூறும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், 'ஜான் ஆரோக்கியசாமி ஆரம்பத்திலிருந்தே தலைவரை சரியாக பொசிஷன் செய்வதில் தீவிரமாக செயல்பட்டார்.

அதாவது, திமுகவுக்கு எதிரான ஒற்றை மாற்று, திமுகவை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஒரே நபர் எனும் நிலைக்கு தலைவரை ஜான் ஆரோக்கியசாமி பொசிஷன் செய்தார். இடையில் சீமான் எங்கள் தலைவரை வம்பிழுத்து பார்த்தார். அந்த சமயத்தில் சீமானுக்கு தலைவர் விஜயயே பதிலடி கொடுக்க வேண்டுமென தொண்டர்களே விரும்பினர். ஆனால், சீமானுக்கு பதிலடி கொடுத்தால் களம் சீமான் vs விஜய் என மாறிவிடும் என்பதை உணர்த்தி கவனம் மொத்தத்தையும் திமுக எதிர்ப்பின் மீதே குவித்தார்.

ஜான் ஆரோக்கியசாமி

அதேமாதிரி, அதிமுக வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்த போதும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றி தவெகதான் முதன்மை சக்தி என்பதை மிகச்சரியாக மக்கள் மனதில் பதிய வைத்தார். ஜான் விஜய்யை பொசிஷன் செய்வதில் கவனம் செலுத்த, ஆதவ் அர்ஜூனாவோ பூத் கமிட்டி பணிகளை முடுக்கி விட்டிருந்தார். பூத்தில் முகவர்கள் எப்படி துடிப்பாக செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி பயிற்சி முகாம்களை நடத்திக் கொண்டிருந்தார். அதேமாதிரி, வாரா வாரம் தொகுதிவாரியாக சர்வே முடிவுகளை எடுத்து அதன்படி வேட்பாளர் தேர்வை வீரியமாக செய்யவும் காரணமாக இருந்தார்.

மேலும் இருவரும் இணைந்து ஒரு மிக முக்கியமான தருணத்தில் விஜய்க்கு தோள் கொடுத்தனர். அதாவது, ஒரு கட்டத்தில் ஜனநாயகன் பட விவகாரம், சிபிஐ விசாரணை என தலைவரை பாஜக கடுமையாக நெருக்கியது. அந்த சமயத்தில் அதிமுக கூட்டணியில் இணையலாம், வேண்டாம் என இரண்டு விதமான கருத்துகள் கட்சிக்கு உள்ளேயே பேசப்பட்டது.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

அந்த சமயத்தில் மிகத் தெளிவாக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழக மக்கள் நம்மை ஏற்கமாட்டார்கள் என விஜய்யிடம் தீர்க்கமாக கூறியது ஜானும் ஆதவ்வும்தான். அவர்கள் கூறியதால்தான் விஜய்யும் மிகத்தெளிவாக ஒரு முடிவை எடுத்து இன்று மக்களின் நம்பிக்கையையும் பெற்றார்' என்கின்றனர்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க