செய்திகள் :

'பொறந்த குழந்தையோட போய் நின்னேன்; அவமானப்படுத்தி அனுப்புறாங்க!' - மேயர் பிரியா vs தவெக எம்.எல்.ஏ!

post image

திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் பள்ளிக்கட்டிடம் திறக்கும் விழா ஒன்றில், மேயர் பிரியாவால் தவெக எம்.எல்.ஏ பல்லவி புறக்கணிக்கப்படதாக செய்தி வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

பல்லவி
பல்லவி

புளியந்தோப்பில் பள்ளிக் கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சியில் மேயர் தன்னை புறக்கணித்துவிட்டதாக கூறி தவெக எம்.எல்.ஏ பல்லவி பாதியிலேயே வெளியேறியிருக்கிறார். நிகழ்வில் என்ன நடந்தது என விசாரிக்க பல்லவியை தொடர்புகொண்டோம். 'திரு.வி.க நகரில் திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளை தாண்டி தளபதியின் ஆசியால் நான் வென்றிருக்கிறேன்.

நிறைமாத கர்ப்பிணியாகத்தான் பிரசாரத்தை மேற்கொண்டேன். எனக்கு குழந்தை பிறந்தே ஒரு வாரம்தான் ஆகிறது. இந்நிலையில், வார்டு 73 மற்றும் 75 இல் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை திறக்கவிருப்பதாக கூறி மண்டல அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்தது. எம்.எல்.ஏ ஆன பிறகு தொகுதிக்குள் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ரொம்பவே மகிழ்ச்சியாக தயாராகியிருந்தேன். என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், விளக்கேற்றும் போது அவர் வேண்டுமென்றே என்னை புறக்கணித்தார். அவர் விளக்கேற்றியவுடன் அப்படியே துணை ஆணையரிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தவர் அதன்பின் வார்டு கவுன்சிலரிடம் மெழுகுவர்த்தியை கொடுத்துவிட்டார். முதலில் அவர் வேண்டுமென்றே செய்தார் என நான் நினைக்கவில்லை. கூட்டத்தில் எதோ மறந்துவிட்டார் என்றுதான் எண்ணினேன்.

ஆனால், இரண்டாவது பள்ளியிலும் இதையேதான் செய்தார். நான் மெழுகுவர்த்தியை வாங்க கையை நீட்டிய போதும் அவர் என்னிடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்று தெரிந்தது. உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டேன். தேர்தல் முடிவுகளால் இவர்கள் எங்கள் மீது கடுப்பில் இருப்பதைப் போல தெரிகிறது. அதற்காக மக்கள் நலத்திட்டங்களின் ஈகோ பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்?

பல்லவி
பல்லவி

இப்படித்தான் 72 வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணன், 'ஓட்டுப் போட்ட விஜய்க்கிட்ட போயி எல்லாத்தையும் கேளுங்க' என்று அநாகரிகமாக பேசி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதற்காகவெல்லாம் நான் ஓய்ந்துவிடமாட்டேன். மக்களுக்காக என்றைக்கும் களத்தில் நிற்பேன். உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பற்ற தன்மையை முதல்வரிடம் எடுத்து செல்வேன்' என்றார்.

'அரசு நிகழ்வுகளில் இதுதான் புரோட்டோக்கால். ஐ.ஏ.எஸ் அதிகாரி விளக்கு ஏற்றிய பிறகுதான் எம்.எல்.ஏ ஏற்ற வேண்டும். இது தெரியாமல் அவர் கோபித்து செல்கிறார்' என மேயர் பிரியா விளக்கம் சொல்கிறார்.

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெறத் தடை; ஏன் தெரியுமா?

அஸ்ஸாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெற தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்த சனிக்கிழமை (ஜூன் 13), அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.என்ன அறிவ... மேலும் பார்க்க