செய்திகள் :

"மதுரை மத்திய தொகுதியில் வென்றால் இறைச்சிக் கடைகளை மூடுவேனா?" - சுந்தர் சி விளக்கம்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், 'தேர்தலில் வெற்றி பெற்றால் மதுரை மத்தியத் தொகுதியில் இறைச்சி விற்பனையைத் தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தைப் பாதுகாப்பேன்' என்று சுந்தர் சி பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தேர்தலில் போட்டியிடும் சுந்தர் சி
தேர்தலில் போட்டியிடும் சுந்தர் சி

தற்போது சுந்தர் சி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சிக் கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது.

மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும்.

போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் இருக்கும் பயணிகள்

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் ... மேலும் பார்க்க

`பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடிமை பழனிசாமி, புதுச்சேரியில் ரங்கசாமி!’ - கடுகடுத்த ஸ்டாலின்

``ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள்...”இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று மாலை புதுச்சேரி வந்த முதல்வர் ஸ்டாலின், ``தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும்... மேலும் பார்க்க

தொடங்கிய வேட்புமனு பரிசீலனை; வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியில் இருந்தும் வேட்பாளர்கள் ... மேலும் பார்க்க