செய்திகள் :

'மனுவை அப்லோட் பண்ணா அப்பாயின்மென்ட் போனுக்கே வந்திடும்' - அமைச்சர் ராஜ்மோகன் அறையில் புதிய முயற்சி!

post image

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ் மோகனின் அறைக்கு வெளியே டிஜிட்டல் முறையில் மனுக்களைப் பெறும் வகையில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் மெஷின்
அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் மெஷின்

கல்வி மற்றும் செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகனின் அறைக்கு வெளியே QR கோர்டுடன் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

நம்முடைய போனில் அந்த QR கோர்டை ஸ்கேன் செய்தால் மனு விவரங்களை உள்ளிடுவதற்கான பகுதி திறக்கிறது.

அதில் நம்முடைய பிரச்னைகளைப் பதிவேற்றி விட்டு மொபைல் நம்பரை உள்ளிட வேண்டும். மொபைல் நம்பருக்கு ஒரு OTP வருகிறது. அந்த OTP-யை உள்ளிட்டால் அமைச்சரின் நேரத்தைப் பொறுத்து எப்போது சந்திக்கலாம் என்கிற அப்பாயின்மென்ட் விவரங்களும் போனுக்கே குறுந்தகவலாக வந்துவிடும் என்கின்றனர்.

நேற்றிலிருந்துதான் இந்தக் கருவி அமைச்சரின் அறைக்கு வெளியே பொறுத்தப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக பேசும் அமைச்சர் தரப்பினர், ''மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை பார்வையாளர் நேரம் என ஒதுக்கப்பட்டிருந்தாலும் காலையிலிருந்து இரவு வரை அமைச்சரைச் சந்தித்து மனு கொடுக்க மக்கள் குவிகின்றனர்.

ராஜ் மோகன்
ராஜ் மோகன்

கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே காத்திருக்க வேண்டியிருக்கிறது. அமைச்சர் அலுவல் பணிகளை மேற்கொள்வதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதைச் சரிகட்டவே அப்பாயின்மென்ட் வழங்கவும் மனுக்களைப் பெறவும் புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்தச் சேவையை இன்னும் மேம்படுத்துவோம்'' என்றனர்.

QR கோர்டு வசதி புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மனு கொடுக்க வந்த சிலர் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டனர். வயதானவர்கள் மற்றும் டிஜிட்டலைப் பற்றி விழிப்புணர்வு இல்லாத சாமானிய மக்களுக்காக அந்தக் கருவியின் பக்கத்தில் ஒரு உதவியாளரை நிரந்தரமாக நியமித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிலர் பரிந்துரைகளை முன்வைக்கின்றனர்.

"நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால் விஜய்யின் பதவியேற்பு விழாவே நடத்திருக்காது" - பெ.சண்முகம் கடும் தாக்கு | Live Updates

விஜய்-க்கு பெ.சண்முகம் பதிலடிநேற்று (ஜூன் 23, 2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், "தாங்கள் யார் தயவிலும் ஆட்சி அமைக்கவில்லை" என்று பேசியிருந்தார்.நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்ச... மேலும் பார்க்க

'முதலீட்டாளர்களிடம் திமுக அரசு பணம் கேட்டதா?' - கவனம் பெறும் ஆந்திர அமைச்சரின் ட்வீட்!

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டன என்கிற பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு தொழிற்துறை... மேலும் பார்க்க

கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' - திமுக துணை மேயர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மேயர் சவரணன் தலைமையில் நடந்தது. தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கத... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற முதலீடுகள்' பட்டியலிட்ட கீர்த்தனா; ஏன் சென்றன? - TRB ராஜா விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் சென்ற முதலீடுகள் எ... மேலும் பார்க்க

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர் விரிவான அலசல்!

தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய்யும் அவையில் பதிலளித்து முடித்திருக்கிறார். தவெக அரசு அமைந்து 40 நாட்களை நிறைவு செய்திருக்... மேலும் பார்க்க

`மாணவர்கள்மீது கழிவுநீர் பீய்ச்சியடிப்பு' - பினராயி கண்டனம்; சுடிதார் நிறம் மாறியதாக CPM புகார்

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ கல்வித்திட்டத்தில் நிபந்தனைகளுடன் இணைவதாக கேரள மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான சி.பி.எம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளம்... மேலும் பார்க்க