செய்திகள் :

"மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள் இன்று!"- தவெக வெற்றி குறித்து ஆதவ் ஆர்ஜுனா

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தற்போதைய நிலவரப்படி 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

த.வெ.க தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா தவெக
ஆதவ் அர்ஜுனா தவெக

இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 50 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களும், பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று. பல்வேறு அவதூறுகளைக் கடந்து த.வெ.க வெற்றி பெற்றிருக்கிறது.

75 வருட கட்சிகள் எங்களை எள்ளி நகையாடினார்கள். ஆனால் நாங்கள் அமைதியான முறையில் எங்கள் தலைவர் வழியில் செயல்பட்டோம்.

தலைவரின் பிரச்சாரம் தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வரலாறு இந்தியாவே எதிர்பார்க்காத ஒரு வரலாறு. இது ஓர் உணர்ச்சிபூர்வமான தருணம்" என்று பேசியிருக்கிறார்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க