செய்திகள் :

மயிலாப்பூரில் மலராத தாமரை - 'மீண்டும் மீண்டும்' தோல்வியில் தமிழிசை சௌந்தரராஜன்!

post image

2006-ம் ஆண்டில் இருந்து பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

ஆனால், இதுவரை எந்தத் தேர்தலும் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை... சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டிலுமே மக்கள் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் தமிழிசை.

ஆனால், அந்தத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்று, நாடாளுமன்ற படிகள் ஏறினார்.

இதனையடுத்து, பாஜக தலைமை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழிசையை தெலங்கானா கவர்னர் ஆக்கி அழகு பார்த்தது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

2021-ம் ஆண்டு புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

ஆனால், 'ஆசை யாரைத் தான் விட்டது?' 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் மாதம் தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

ராஜினாமாவிற்கு பின், சென்னை தெற்கு தொகுதியில் திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியனை எதிர்த்து போட்டியிட்டார்.

ஆனால், அதிலும் தமிழிசைக்கு மக்கள் கொடுத்தது தோல்வியைத் தான்.

இருந்தும், தமிழிசை தொடர்ந்து அரசியலில் சுழன்று வந்தார். இதன் விளைவாக, 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழிசைக்கு மயிலாப்பூர் தொகுதி கொடுக்கப்பட்டது.

மயிலாப்பூரில் பிராமணர்கள் மற்றும் மீனவர் சமூக வாக்குகளை மிக அதிகமாக நம்பியே அங்கே பாஜக களமிறங்கியது. ஆனால், அங்கே அந்த இரு சமூகங்களுக்கும் தவெக தான் சாய்ஸாக இருந்துள்ளது என்று களம் சொல்கிறது.

ஆக, தவெக-வை சேர்ந்த வெங்கட்ராமன் முதல் இடத்தையும், திமுக-வை சேர்ந்த த.வேலு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளார் தமிழிசை.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க