நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கை; உதவிக்கரம் நீட்டிய தவெக எம்.எல்...
வயநாடு: "அந்த உத்தரவு மீறப்பட்டதே நிலச்சரிக்குக் காரணம்'' - கேரள முதல்வர் விளக்கம் | Live Updates
வயநாடு நிலச்சரிவிற்குக் காரணம் என்ன? - சதீஷன் பதில்
கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அந்தப் பகுதியான கல்லாடியில் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் சதீஷன், "கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிமருந்து வைத்து தகர்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாகச் செயல்பட்ட கன்டெய்னர்கள், மண் அள்ளும் எந்திரம் போன்றவை மண்ணுக்கடியில் புதைந்துள்ளன.
சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்த மணல் குன்றுகளை நீக்க ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த உத்தரவு மீறப்பட்டதே இந்தத் துயர சம்பவத்திற்குக் காரணம். இது மிகவும் துரதிர்ஷ்டமான பேரழிவு ஆகும்" என்று கூறியுள்ளார்.
இந்தியா, தமிழ்நாட்டின் இன்றைய செய்திகளை தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க!














