செய்திகள் :

வேளாங்கண்ணி: சர்ச் முன்பு திரண்ட தொண்டர்கள்; ரத்தான விஜய் வருகை; விமர்சனத்துக்கு உள்ளான தவெக கோஷம்!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படுகிறது. எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் கலவையாக இருந்ததால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்கிற குழப்ப நிலை தொடர்வதாகப் பலரும் சொல்கிறார்கள்.

த.வெ.க இந்தத் தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய் நம்பிக்கையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்.

தனக்கும், தன் கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன், சீரடி சாய்பாபா ஆகிய வழிப்பாட்டு தலங்களில் விஜய் வழிபாடு செய்தார்.

வேளாங்கண்ணி சர்ச்
வேளாங்கண்ணி சர்ச்

இதையடுத்து நேற்று வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்ஹாவிற்கு விஜய் வர இருப்பதாக முன்கூட்டியே தகவல் வெளியானது. அதிகாலை வேளாங்கண்ணி சர்ச்சில் நடைபெறும் திருப்பலியில் விஜய் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் பரவியது.

இதனால் நேற்று அதிகாலையிலேயே த.வெ.க தொண்டர்கள் விஜய்யைக் காண்பதற்கு வேளாங்கண்ணி சர்ச் முன்பு திரண்டனர். சர்ச் உள்ளேவும், முகப்புப் பகுதியிலும் பெரும் கூட்டம் கூடியதால் வழிபாட்டிற்கு வந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், விஜய் வேளாங்கண்ணி வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் விஜய்யைக் காண காத்திருந்த தொண்டர்கள் அப்செட் ஆகினர். பின்னர் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக உறுதியான தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து ஏமாற்றமடைந்த சர்ச்சுக்குள் இருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் டி.வி.கே, டி.வி.கே எனக் கோரஸாகக் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்தச் சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க