செய்திகள் :

`ஸ்டாலின் குடும்பமே களமிறங்கியும்.!' - விஜய் ஸ்கெட்ச்; வில்லிவாக்கத்தில் ஆதவ் காட்டிய ரிசல்ட்!

post image

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் உற்றுநோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சென்னை மாவட்டத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்த 2026 தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான களமாக மாறியுள்ளது.

ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், இத்தொகுதி 85.98% என்ற மிக அதிகப்படியான வாக்குப்பதிவைப் பதிவு செய்தபோதே, ஒரு 'அரசியல் மாற்றம்' ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா  15,461 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் உள்ளார். தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன் பின்னடைவை சந்தித்துள்ள செய்தி, திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா தவெக
ஆதவ் அர்ஜுனா தவெக

சென்னை சென்ட்ரல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம், பாரம்பரியமாக திமுக மற்றும் இடதுசாரிகளின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இந்தத் தொகுதியில், தற்போது த.வெ.க முன்னிலை பெற்றுள்ளது சாதாரணமான விஷயம் அல்ல.

அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே.மோகனின் மகன் கார்த்திக் மோகனுக்காக, தி.மு.க-வின் தலைமை குடும்பத்தின் முக்கியப் புள்ளியான சபரீசன் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றியும், ஆளுங்கட்சியால் தற்போதைக்கு முன்னிலை பெற முடியவில்லை. தி.மு.க இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

த.வெ.க-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தொகுதியில் மேற்கொண்ட பிரச்சார முறைகளும், "மாற்றம்" என்ற முழக்கமும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த எண்கள் காட்டுகின்றன.

அனுபவம் வாய்ந்த எஸ்.ஆர்.விஜயகுமார் (அ.தி.மு.க) மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் ரோஷிணி 4 இடத்திலும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா தவெக
ஆதவ் அர்ஜுனா தவெக

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியின் பக்கத்து தொகுதி வில்லிவாக்கம் என்பது ஆதவ்-க்கு பெரும் வலுசேர்ப்பதாக ஆகிவிட்டது. மேலும் ஆதவ், தனது தொகுதியில் தனி கவனம் செலுத்தினார். தொகுதியில் வார்டு வார்டாக வலம் வந்து மக்களை சந்திப்பது உள்ளிட்ட விஷயங்கள் கை கொடுத்தது. மேலும், திமுக தரப்பில், தலைமையின் குடும்பமே களம் இறங்கியது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தொகுதியில் முகாமிட்டு பணியாற்றினார். மேலும் முதர்வர் ஸ்டாலினும் இந்த தொகுதியில் தான் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

ஆனாலும் அது அனைத்தையும் தகர்த்து, தற்போது ஆதவ் அங்கு வெற்றி முகத்தில் இருக்கிறார்.

"திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்ப்பது புதிய கட்சிகளுக்கு எளிதல்ல" என்ற அரசியல் நோக்கர்களின் கணிப்பை தற்போதைய நிலவரம் சுக்குநூறாக்கியுள்ளது.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க