செய்திகள் :

ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி: இருஇந்திய கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான் புரட்சிகர காவல்படை

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நிறுத்தத்தை தற்போது நீட்டித்து இருக்கிறார்.

அதேசமயம் இப்போது ஈரான் துறைமுகங்களுக்குள் எந்த வித கப்பலும் செல்ல விடாமல் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மீண்டும் மூடிவிட்டது. அமெரிக்கா தற்போது ஈரான் துறைமுகங்களுக்குள் கப்பல் வர முடியாமல் முற்றுகையிட்டு இருப்பதை விலக்கிக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக போக்குவரத்திற்கு திறப்போம் என்று ஈரான் கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் ஈரானுடன் நிரந்தர ஒப்பந்தம் ஏற்படாத வரை ஈரான் துறைமுகத்திற்குள் எந்தக் கப்பலையும் விடமாட்டோம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயலும் சரக்கு கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படை தாக்கி வருகிறது. சில கப்பல்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, கப்பல் வழித்தட சிக்னல்களையும் ஆஃப் செய்துவிட்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயற்சிக்கின்றன.

அது போன்ற கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படையினர் தாக்கி வருகின்றனர். ஏற்கெனவே இது போன்று இரு இந்திய கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி செய்துள்ளன. அதில் ஒரு கப்பல் துபாயில் இருந்து குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பனாமா மற்றும் லிபிய கொடிகளுடன் இரண்டு இந்திய கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றதைக் கண்டுபிடித்த ஈரான் புரட்சிகர காவல் படையினர், அக்கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதோடு அக்கப்பல்கள் இரண்டையும் பறிமுதல் செய்து ஈரான் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். துபாயிலிருந்து வந்து கொண்டிருந்த அந்தக் கப்பல்களிடம் தேவையான அனுமதி இல்லை என்றும், அவை கடல் வழித்தட அமைப்பில் மோசடி செய்ததாகவும் ஈரானிய கடற்படை கூறியுள்ளது.

மூன்றாவதாக ஒரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் அந்தக் கப்பல் ஈரான் கடற்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது. இரண்டு இந்திய சரக்கு கப்பல்களை ஈரான் பறிமுதல் செய்து இருப்பது இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தவிர பிரிட்டனுக்கு சொந்தமான மூன்று கப்பல்களும் ஹார்மூஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளானது. சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் ஈரானுக்கு சொந்தமான இரண்டு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்தது. அமெரிக்காவும், ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் நடந்து கொள்ளும் விதம் உலக நாடுகளை மிகவும் அதிருப்தியடைய செய்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால் உலகம் முழுவதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு டிமிக்கி கொடுத்த 34 கப்பல்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா 'முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது' என்று கூறிக்கொண்டிருந்தாலும் ஈரான் கப்பல்கள் தொடர்ந்து அமெரிக்காவின் தடையை மீறி சென்று கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் முற்றுகைக்கு பிறகு 34 டேங்கர் கப்பல்கள் அமெரிக்காவின் தடையை மீறி வளைகுடாவை கடந்து சென்று இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதில் 19 கப்பல்கள் ஈரானில் இருந்து வெளியேறி இருக்கிறது. இது தவிர 15 கப்பல்கள் அரபிக்கடல் வழியாக வளைகுடாவிற்குள் நுழைந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி கூறுகிறது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு; 11.6% வாக்குதான் மம்தாவிற்குச் சவாலா?

தமிழ்நாட்டில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடந்து வருவதுபோல, மேற்கு வங்கத்திலும் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தின் அடுத்த கட்ட தேர்தல் வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ளது. தம... மேலும் பார்க்க

போக்குவரத்து குளறுபடி திட்டமிட்ட தோல்வி! - தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெறும் நிலையில் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்க புறப்பட்டுச் சென்ற மக்கள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியிருக்... மேலும் பார்க்க

Chennai : 'ஊருக்கு போக பஸ் இல்ல!' - நள்ளிரவில் அவதிப்பட்ட மக்கள்; கோட்டைவிட்ட போக்குவரத்து துறை?

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்க புறப்பட்டுச் சென்ற மக்கள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியி... மேலும் பார்க்க