செய்திகள் :

'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை?

post image

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில்  இறங்கியுள்ளது தி.மு.க.

கடந்த ஒரு வாரமாக   நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது. மற்றொருபுறம், தி.மு.க கூட்டணியில் இழுபறியாக இருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடனான  தொகுதி பங்கீட்டையும் தி.மு.க தலைமை ஒரே நாளில் இறுதி செய்துவிட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு இடங்கள் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தி.மு.க வைத்த கோரிக்கையால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இதனால் தி.மு.க பிற கூட்டணிக் கட்சிகளுடன் கிட்டதட்ட தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் தி.மு.க தரப்பு முடிவு செய்துவிடும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நாற்பது தொகுதிகளின் பட்டியலை தி.மு.க தரப்பிடம்  கொடுத்துள்ளது. அதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை இரண்டு நாட்களுக்குள் அளித்துவிடும் என தெரிகிறது.

இந்த வார இறுதிக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்ய வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளிடம் முதல்வர் சொல்லியுள்ளார். வேலு, நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளிடம் விரைவில் தொகுதியை இறுதி செய்ய இருக்கிறார்கள். கூ்ட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதியான பிறகு முதல்வர் பிரசாரத்தை துவக்க உள்ளார் என்கிறார்கள் தி.மு.கவினர்.

இதுகுறித்து தி.மு.க மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசும் போது “தொகுதிகள் முடிவான பிறகே முதல்வர் பிரசாரத்திற்கு கிளம்ப உள்ளார். மாவட்டத்திற்கு ஒரு இடம் என்கிற ரீதியில் பிரசாரம் திட்டமிடப்பட உள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஏப்ரல் 2-ம் தேதி அன்று காலை தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்று மாலை சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று, ஏப்ரல் 3-ம் தேதி தஞ்சாவூர் அல்லது திருவாரூரிலிருந்து முதல்வர் பிரசாரத்தை துவக்கும் வகையில் தி.மு.க வின் வியூகும்  உள்ளது” என்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவுக்கு அதன் தேர்தல் அறிக்கை பெரும் பலமாக அமையும். அதனாலே தி.மு.க-வின் தேர்தல் கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான் என கருணாநிதி குறிப்பிடுவார்.அந்த வகையில், இந்த முறையும் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையே பேசுபொருளாக இருக்கும் என்கிற பேச்சு எழுந்துள்ளது. 

இதுகுறித்து தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் “கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கடந்த ஒரு மாதமாக தீவிரமாக  தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வர தேர்தல் அறிக்கை முக்கிய காரணம். அதே போல் இந்த முறையும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற உள்ளது. குறிப்பாக எல்.இ.டி-டி.வியை இலவசமாக அறிவிக்கும் திட்டம் இப்போது உள்ளது. 

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

அதே போல் இலவச முழு உடல் பரிசோதனை திட்டம், இளைஞர்களுக்கென பிரதேயக அறிவிப்புகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே,முதல்வர் பிரசாரத்திற்கு கிளம்ப உள்ளார். தேர்தல் அறிக்கையே பிரசாரத்தில் மையப்பொருளாக இருக்க வேண்டும் என்கிற மூடில் முதல்வர் இருக்கிறார்” என்கிறார்கள். 

“முதல் நாள் தேர்தல் அறிக்கை... மறுநாள் தேர்தல் பிரசாரம்” என்று ப்ளானில் இருக்கிறது தி.மு.க தலைமை. 

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடியில் கே.பழனிசாமி; மைலத்தில் சி.வி.சண்முகம் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியி... மேலும் பார்க்க

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவ... மேலும் பார்க்க

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராமதாஸ், ... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப் போறீங்களா? - இனி 'இவ்வளவு' காசு பிடிக்கப் போறாங்க!

டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரூபாய் ரீஃபண்ட் செய்யப்படும் என்பதில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை.அவை என்னென்ன? ரயில் கிளம்புவதற்கு... 72 மணிநேரத்திற்கு முன்பு, எப்போது கேன... மேலும் பார்க்க