திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!
`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்
தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம் என்று எல்லாருமே கூறுகிறார்கள். அனைத்து கட்சிகளும் கூறுகின்றன. விஜய் மட்டும் என்ன புதிதாகவா சொல்கிறார்? நானோ என் மனைவி ராதிகாவோ வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடன் பயணித்தவர்களுக்கு வாய்ப்பை வாங்கி தர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன். தி.மு.கவு-க்கும், த.வெ.க-விற்கும் போட்டி என்பதை மீறி அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது எழுதிக் கொடுத்தது அவ்வளவுதான், அதை படிக்கிறார்கள்.

கூட்டம் அனைவருக்கும் வரும். வடிவேலுவுக்கும் கூட்டம் வரும் நாளைக்கு அன்பு சகோதரர் அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். சினிமா பிரபலங்களின் கூட்டத்திற்கு வருபவர்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்பது குறித்து மக்கள்தான் முடிவெடுப்பார்கள். எதற்காக வாக்களிக்கப் போகிறோம், எந்தக் கொள்கைக்காக வாக்களிக்க போகிறோம். அவர்கள் வந்தால் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியுமா? என்று சிந்தித்து செயல்படுபவர்கள் மக்கள் மட்டும்தான்” என்றார்.















