செய்திகள் :

`அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்'- மல்லை சத்யா

post image

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று பேசியது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல முதல்வர் விஜய் சென்றபோது அங்கு அவரை வரவேற்ற திருச்சி எம்.பி. துரை வைகோ, தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் போனதற்காக ரொம்பவே ஃபீல் செய்து பேசியிருந்தார்.

மதிமுக-வும் தவெக பக்கம் கிளம்ப தயாராகி விட்டதையே துரையின் பேச்சு சுட்டிக் காட்டுவதாகச் சொல்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை முடிவு செய்ய இருக்கிறதாம்.

இந்தப் பின்னணியில் மதிமுக-வின் இந்த திடீர் அரசியல் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறி திராவிட வெற்றிக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியிருக்கும் மல்லை சத்யாவிடம் பேசினோம்.

மல்லை சத்யா

‘’முப்பது வருஷமும் மூணு மாசமும் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்திருக்கார் வைகோ. இதுல இருபத்தொன்பது வருஷம் திமுக சார்பாதான் அனுப்பப் பட்டிருக்கார். பார்லிமென்ட் டைகர், அது இதுன்னு பெருமையா சொல்லிக்கிடுறாரே, அந்தப் பெருமைக்குக் காரணமான வாய்ப்பைத் தந்தது திமுக.

திமுக-வுல அண்ணன் ஸ்டாலினை எதிர்த்துதான் மதிமுக-வையே உருவாக்கினார். ஆனா அதுக்குப் பிறகும்கூட அந்தக் கசப்பையெல்லாம் மறந்துட்டு இவரை டெல்லிக்கு அனுப்பி வச்சார் ஸ்டாலின்.

போதாக்குறைக்கு இவரது மகனுக்கும் திருச்சி தொகுதியை வாங்கித் தந்து அவரையும் எம்.பி ஆக்கினாங்க. திருச்சி தொகுதி துரைக்கு கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. அந்தச் சமயத்துல நான் மதிமுக-வுல இருந்தேன்.

தொகுதியை காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எதிர்பார்த்தார். ஆனாலும் வைகோ விடாப்பிடியா பையனுக்கு கேட்டதால மும்பையில இந்தியா கூட்டணிக் கூட்டத்துல இருந்த ராகுல் கிட்ட நேரடியாப் பேசி தொகுதியை வாங்கித் தந்தார் ஸ்டாலின்.

இவ்வளவு செஞ்சிருக்கற கட்சிக்கு நீங்க காட்டுகிற விசுவாசம்தான் ‘துரதிர்ஷ்டம்’கிற வார்த்தையா?

வைகோவை பொறுத்தவரை மைக் கிடைச்சா ஒன்ணைப் பேசறதும் நிஜத்துல அதற்கு நேர் மாறா நடக்கிறதும் பழகிப் போன விஷயம். ஒரு காலத்துலயும் அவர் கூட்டாளிங்க யாருக்கும் உண்மையானவரா நேர்மையானவரா இருந்ததில்லை.

அதிமுக கூட்டணியில இருந்த ஒரு சமயம் டெல்லிக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்கிற விஷயத்துல சேர்ந்து போகலாம்னு ஜெயலலிதா மேடம் சொல்லியிருக்க, அப்ப சரி சரின்னு தலையாட்டிட்டு சத்தமில்லாம போய் தனியா கொடுத்துட்டு வந்துட்டார். அப்ப அந்தம்மா இவர்கிட்ட கடுமையா கோபிச்சுக்கிட்டாங்க.

விஜய்
விஜய்

ஸ்டாலினுக்கு ஆதரவா இருப்பேன்னு கலைஞர் கிட்ட சத்தியம் செய்து கொடுத்திருக்கேன்னு பொது வெளியில சொல்லியிருக்கார் வைகோ. அதுபத்தி துரைக்கு தெரியுமா தெரியல.

இப்ப அந்த சத்தியம் என்ன ஆச்சு? வைகோவுக்கு இது புதுசு இல்லீங்க. இன்னும் சொல்லப் போனா கொளத்தூர் தொகுதியில அண்ணன் ஸ்டாலின் தோல்வியடைஞ்சதுக்கு தமிழ்நாட்டுல யார் யாரெல்லாம் வருத்தப் பட்டாங்களோ தெரியாது, ஆனா வைகோ உள்ளூர மகிழ்ந்திருப்பார்னு என்னால உறுதியாச் சொல்ல முடியும். அவ்வளவு வன்மம் அவர் மனசுல இருக்கு.

ஸ்டாலின்
திமுக | ஸ்டாலின்

சரி இப்ப உதயசூரியன் சின்னம் துரதிஷ்டமா தெரியுதுல்ல, அந்தச் சின்னத்துல போட்டியிட்ட உங்க உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்வீங்கன்னா அதுக்கு முன்னாடி துரையும் எம்.பி பதவியை ராஜினாமா செய்யணும். உதயசூரியன் தயவுல வாங்கின ஓட்டுலதானே ஜெயிச்சார். அதை செஞ்சுட்டு பிறகு என்ன முடிவுன்னாலும் எடுத்துக்கிடலாம். அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்" என்கிறார் சத்யா.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க