செய்திகள் :

நான் உன்னை உணர்கிறேன்! - ஒரு வங்கி ஊழியரின் பார்வை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"எம்பதி அப்படின்னா என்ன நினைக்கிறிங்க?"

அறையில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினார்கள். அந்தப் பதில்களுக்குத் தலையை மட்டும் அசைத்து விட்டு பயிற்சியாளரே மீண்டும் தொடந்தார்.

"நான் உன்னை உணர்கிறேன்" 

மூன்று நொடிகள் அமைதி காத்தார்.

"ஆமா... நான் உன்னை உணர்கிறேன். வங்கியில் பணிபுரியும் பொழுது நாம் வாடிக்கையாளரிடம் காட்ட வேண்டிய முக்கிய பண்பு எம்பதி அவர்கள் இடத்தில் நம்மை நிறுத்தி அவர்களை உணர்ந்து சேவை செய்ய வேண்டும்" என்றார் வங்கியில் சேர்ந்த முதல் நாள் பயிற்சியில்,

இப்படி ஒரு தெளிவான நோக்கத்துடன் வங்கி அதிகாரிகள் இருக்கும்போது ஏன் வங்கிச் சேவையில் மக்கள் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். அப்படி என்ன தான் நடக்கிறது வங்கியில்?

சீஸ் கேக்!

இதுவரை ருசி அறியாத ஒரு உணவை கண்ணால் பார்க்கும் பொழுதே அது எப்படி இருக்கும் என மூளை ஒரு முடிவிற்கு வந்துவிடும். அந்த முடிவு சரிதானா என்று சோதிக்கும் வேகத்தில் கேக்கை ருசித்தேன். நாக்கில் பட்டதும் கரையும் என்பார்களே அப்படி ஒரு மிருதுவான பதம். கரையக் கரைய அடுத்த வாய் எடுக்க தூண்டும் சுவை. மறுபடியும் சுவைத்தேன் இந்த முறை நாக்கில் பட்டதும் சீஸ் உருகியதை உணர முடிந்தது. இன்னும் சற்று இனிப்பு சேர்த்திருந்தால் திகட்டி இருக்கும் ஆனால் இப்பொழுது தித்தித்தது.

சக பணியாளரின் பிறந்தநாள் கேக்கின் தித்திப்போடு வேலையைத் தொடங்கினேன்.

டோக்கன் எண் ஒன்று கவுண்டர் எண் இரண்டு 

"அக்கௌன்ட்ல எவ்ளோ இருக்குன்னு பார்த்து சொல்லுங்க" என்றார் வாடிக்கையாளர். பாஸ்புக்கைத் திறந்து கணக்கு எண்ணைப் பார்த்தேன். பாஸ்புக்கில் இருந்து திருநீறு வாசம் வீசியது.

"ஆயிரத்தி நூறு ரூபாய் இருக்குன்னா"

"நேத்து தான நாலாயிரம் போட்டேன். எப்படி பணம் போச்சு?" சற்று கோவமாக கேட்டார்.

"நீங்க வெளில பைனான்ஸ்ல எதாவது லோன் வாங்கிருக்கிங்களா?"

"இல்லையே"

"வாஷிங் மெஷின், பிரிட்ஜ், வண்டி அப்படி எதாவது மாச மாசம் பணம் கட்ற மாதிரி"

"ஆமா"

"அவங்க தான் பிடிச்சிருக்காங்க"

"என்ன அவங்கள கேட்டா நாங்க எடுக்கலன்றாங்க.. நீங்க என்னடான்னா அவங்க எடுத்துட்டாங்கன்றிங்க.. பணம் எதுக்கு பிடிச்சீங்க அத சொல்லுங்க" மிகுந்த கோவத்துடன் கத்தினார்.

சுற்றி இருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். எனக்கு மிகவும் சங்கடமானது. எந்தத் தவறும் வங்கியின் மேல் இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும். பணம் செலுத்த வேண்டிய தேதியில் அவர் கணக்கில் பணம் இல்லாததால் அபராதம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவர் எங்கே பொருள் வாங்கினார் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதையெல்லாம் சொல்ல அவர் தயாராக இல்லை. ஆனாலும் நான் பதில் கூற வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.

வங்கி மேலாளர் அவரை உள்ளே அழைத்து அவரின் கணக்கு அறிக்கையைக் காட்டி விளக்கம் கூறியப்பின் அங்கிருந்து கிளம்பினார்.

கூட்டம் நிறைந்த கிளை எங்களுடையது. பலவிதமான உணர்ச்சிகள் கொண்ட மனிதர்களிடம் பேசிப் பேசி என்னுடைய என் இயல்பு எது என்கிற சந்தேகம் எனக்கு அவ்வப்பொழுது எழுந்தது. மனிதர்களுக்கு ஏற்றார் போல் நாமும் மாறுகிறோமோ! யார் எப்படி பேசினாலும் நான் இன்னும் கூட பொறுமையாய் தெளிவாய் வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டுமோ! அவர்களும் ஏதோ ஒரு தேவைக்காகத் தானே வங்கிக்கு வருகிறார்கள். 

என் சகப் பணியாளர்கள் வாடிக்கையாளர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதை கவனிக்கத் தொடங்கினேன்.

வங்கியில் பணிபுரிபவர்கள் சொந்த வாழ்க்கையின் பிரச்சனையை வேலையில் காட்டுகிறார்கள் என்பார்கள். கோபமாகவும் சலிப்போடும் திமிராகவும் இருக்கும் ஊழியர்களைத் தான் பார்த்திருக்கிறார்கள் என்றால் இங்கே நான் பார்த்தவர்கள் வியப்பூட்டும் ஊழியர்கள்.

என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஒருவர் கோபமாக இருந்தாலும் சரி மனச்சோர்வோடு இருந்தாலும் சரி அதை வாடிக்கையாளரிடம் காட்டவே மாட்டார்.

நம்மிடம் பேசும் குரலில் கலகலப்பு, கோவம், கிண்டல் எல்லாமும் இருக்கும். ஆனால் வாடிக்கையாளரிடம் பேசும்போது அப்படியே ஒரு மாற்றம். குரலில் ஒரு அமைதி நிறைந்த தெளிவு இருக்கும். யார் என்ன கேள்வி கேட்டாலும் அவர்களுக்குப் புரியும் படி பொறுமையாக மரியாதையுடன் கூறுவார்.

எப்படி ஒருவரால் தன்னை இந்த அளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஒரு தியான நிலை போன்று. வாடிக்கையாளர் என்றால் ஒரே மாதிரியான குரல் நயம் தான். அவர்கள் எப்படி பேசினாலும் நான் இப்படித்தான் பேசுவேன் என்று.

இன்னொருவர்..

சில வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது முதலில் அதட்டுவார். அதட்டலில் கூட ஒரு நல்ல தொனி. அப்புறம் பொறுமையாகப் பேசுவார். சிலரை நம் பேச்சைச் கேட்க வைக்க முதலில் அதட்ட வேண்டியது அவசியமாகத் தான் இருக்கிறது என்பதையும் அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்.

அபப்டியா ஏன் அதட்ட வேண்டும் அன்பாலயே புரிய வைக்க முடியாதா என்ன?

இல்லை முடியாது தான்.

வரிசையாக வாருங்கள் என்றால் அனைவருக்கும் அவசரம். சிலருக்கு காத்திருக்க பொறுமையே இருப்பதில்லை.

இன்னும் சிலரோ நாம் என்ன சொன்னாலும் அதிலிருந்து மீண்டும் கேள்வி கேட்கும் வாடிக்கையாளர்கள்.

"செக் புக் எப்போ வரும்?"

"ஒரு வாரத்துல வீட்டுக்கு கொரியர் வரும்"

"ஒரு வாரம் ஆகுமா.. கொஞ்சம் அவசரமா இப்போவே வேணும். ஒரே ஒரு செக் மட்டும் இப்போ குடுக்க முடியுமா?"

எப்படி முடியும். காசோலை பொறுத்த வரை வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்கத் தான் முடியும். தலைமையகத்தில் இருந்து அச்சு ஆகி வீட்டு முகவரிக்குத் தான் காசோலை அனுப்பி வைக்கப்படும்.

கையில் கிடைக்குமா என்றால் கிடைக்காது. உடனே கிடைக்குமா என்றால் கிடைக்காது. ஒரு வாரம் ஆகத் தான் செய்யும். இதைத் தெளிவாக கொஞ்சம் வலுவான குரலில் வாடிக்கையாளரிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். 

ஒரே நாளில் அந்த வேலையை செய்து முடிக்கவும் முடியாது. பொய்யான நம்பிக்கையை வாடிக்கையாளருக்கு கொடுக்கவும் கூடாது. துணிச்சலாக விஷயத்தை சொல்லிவிட வேண்டும்.

இந்தத் துணிச்சலை அவரிடம் கண்டு வியந்தேன்.

இன்னொரு புதுமையானவரைப் பற்றி சொல்ல வேண்டுமே...

"என்ன வேலை இது.. எனக்குப் பிடிக்கலை" என்பார் தான் வேலை செய்யும் இடத்தை திட்டுவார். ஆனால் வாடிக்கையாளரிடம் மட்டும் அன்பாகத் தான் பேசுவார்.

"எனக்கு இந்த வேலை பிடிக்கும் என் வேலைய நினைச்சு எனக்கு திருப்தியா இருக்கு. ஆனால் கஸ்டமர் கிட்ட பேசும்போது பொறுமைய இழந்தட்றேன். ஏன் இவ்ளோ கேள்வி கேக்கறாங்கன்னு நினைக்கிறேன். ஆனால் நீங்க எப்படி வேலையே பிடிக்கலைன்னு சொல்றிங்க.. ஆனால் கஸ்டமர் கிட்ட சூப்பரா பேசுறீங்க.. அவங்களும் பேங்க் வந்தாலே உங்கள தான் கேக்கறாங்க.. எப்படி?"

"எனக்கு இந்த வேலை பிடிக்காது.. வேலையை நினைச்சு திருப்தியும் இல்லை.. ஆனால் மத்த மனுசங்கள பிடிக்கும்.. அவங்க இடத்துல என்னை வெச்சி தான் அவங்களுக்கு பதில் சொல்வேன்.. என் முன்னாடி பதட்டமாவோ சோகமாவோ நிக்குறாங்கன்னா எனக்கு அத எப்படியாவது சரிப்பண்ணனும்னு தோணும்.. அதுக்காக நான் முயற்சி பண்வேன். இதுல ஒரு சுயநலம் கூட இருக்கலாம்" 

"சுயநலமா?"

"ஆமா அவங்களுக்கு வேண்டியது கிடைக்கும் போது அவங்க நம்மள பாத்து ஒரு பார்வை சந்தோசமா பாப்பாங்களே அதுக்காக வேலை செய்றேன்"

அவர் சொல்லும்பொழுதே எனக்கு என்னவோ போல் இருந்தது. எனக்கும் அப்படி ஒரு பூரிப்பை அனுபவிக்க ஆசை ததும்பியது. அனுபவிக்க வாய்ப்பு கிடைக்குமா!

இன்னும் பலவிதமான அதிகாரிகளின் வேலை செய்யும் முறையைக் கவனித்தேன். மேல் கூறிய மூவரின் பணியாற்றும் நடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களின் சிந்தனையும் தாக்கமும் எனக்குள் இருந்தது. அவர்களின் சாயலில் வெளிப்பட விரும்பினேன்.

பணியில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் முழுதாய் வாடிக்கையாளர்களைக் கிரகிக்க முடியவில்லை. இன்னும் மனிதர்களை நான் கவனிக்க வேண்டுமோ!

"மேடம் காபி போடவா?" ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் தனம் அக்கா கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.

"கொண்டு வாங்கக்கா"

காபி குடிக்கும் பழக்கம் பெரிதாக இல்லை. வேலைக்குச் சேர்ந்தப் பின் ஏற்படுத்திக் கொண்ட ஆசை. காபியை மாலை வேளையில் குடிக்கும் பொழுது காலையில் இருந்து பெரிதாய் ஏதோ சாதித்தத் திருப்தியோடு ஆசுவாசமாக குடிப்பேன்.

காபி போடுவதற்காக தனம் அக்கா பாலைக் கொதிக்க வைக்கும் பொழுதே எனக்குக் காபியின் மணம் தான் வீசும்.

காபி போட்டதும் அதே சூட்டில் அருந்தினால் தான் எனக்கு குடித்தது போல் இருக்கும். காபியை என் மேஜையில் வைத்ததும் எடுத்துக் குடிக்கத் தொடங்குவேன்.

முடிந்த வரை அந்த இரண்டு நிமிடத்திற்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன்.

காபியின் சுவை மட்டும் மூளைக்கு எட்டிய நிமிடத்தில் 

'அள்ளி சிந்தும் அழகின் துளிகள் 

உயிரில் பட்டு உருளும்…

வசமில்லா மொழியில் இதயம் 

எதையோ உளறும்…'

காதில் இசை வந்து உரசியது. யாரோ ஒரு வாடிக்கையாளரின் ரிங்க்டோன். ஆ ஏதோ ஒரு நல்லப் பாட்டு.. என்ன பாட்டு இது.. முதல் வரியைத் தேடியது மூளை. கண்டுபிடிக்கும் வரை காபி இறங்கவில்லை. என்னவா இருக்கும். என்னவா இருக்கும். இசையோடு முனுமுனுத்தேன். ஏதோ ஒர் இரத்த அணுவில் இருந்து முதல் வரி கசிந்தது நினைவில். கண்டுபிடித்த உற்சாகத்தில் காபி இன்னும் மதுரமானது.

திங்கட்கிழமை காலை

"ஆதார் ஒரிஜினல் காமிங்க" என் பக்கத்து இருக்கையில் இருந்த அதிகாரி வாடிக்கையாளரைக் கேட்டார்.

"ஒரிஜினல் தான் இது" என கைபேசியில் இருந்த அசலின் புகைப்படத்தை காண்பித்தார் வாடிக்கையாளர்.

'நான் சரியா தான பேசுறேன்' என்பது போல் என்னைப் பார்த்தார்.

'ஒரிஜினல் எங்கன்னு கேட்டா அதோட போட்டோவ காட்டி இதுதான் ஒரிஜினல் அப்படின்னு சொல்றாங்க.. இப்போ எப்படி அடுத்த கேள்வி கேக்கறது' என்றது அவர் கண்கள்.

இன்னொருவருக்கு அலைபேசியின் மூலமே அவர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் வாடிக்கையாளர் சேவை எண்ணைக் கூறினேன்.

"இன்னும் ரெண்டு நம்பர் சொல்லுங்க" என்றார் 

"இன்னும் ரெண்டு நம்பரா புரிலயே சார்"

"போன் நம்பர்னா பத்து நம்பர் இருக்கணும்ல.. எட்டு நம்பர் தான் இருக்கு"

'என்ன' என வடிவேலுவின் பாவனையில் திகைத்தேன்.

'டோல் ஃப்ரீ நம்பர்க்கும் பத்து நம்பர் வேணும்னா நான் எங்க போறது' மெல்லிய சிரிப்பும் வந்தது 

மனிதர்கள் சுவரஸ்யமானவர்கள் தான்.

"எதுக்கு இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வெக்கிறீங்க.. என்னோடது இங்க எவ்ளோ டெபாசிட் வெச்சிருக்கேன் தெரியுமா.. டெபாசிட் அமௌன்ட்லாம் நான் வேற ப்ராஞ்சுக்கு மாத்திக்கிறேன்"

மேலாளர் அறையில் இருந்து வாடிக்கையாளர் உரக்கப் பேசும் சத்தம் கேட்டது.

டோக்கன் வரிசைப்படி ஒவ்வொருவராய் வந்து போய் கொண்டிருந்தனர். இன்று சற்று கூட்டம் அதிகம் தான். அழைக்க நேரம் ஆகிவிட்டது என்பதற்காக இப்படி கூறுகிறார்.

காத்திருக்க வைத்துவிட்டதில் இவ்வளவு கோவமா! முன்னே வந்தவர்களைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லையா! வங்கியில் வேண்டும் என்றே காத்திருக்க வைக்கிறார்கள் என்றோரு பிம்பம் இன்னும் நிலைத்து நிற்பதாலோ!

என்ன தான் செய்வது. மகிழ்ச்சியோடு செல்லும் வாடிக்கையாளர்களின் முகத்தை காண..  இல்லை நான் இன்னும் முயற்சி எடுக்க வேண்டுமா.. நெகிழ்ச்சியான தருணங்கள் என்று சகப் பணியாளர்கள் சொல்வதெல்லாம் எப்பொழுது தான் நிகழும்.. 

யோசனையில் அடுத்த டோக்கன் எண்ணை அழைத்தேன்.

"அக்கௌன்ட் ல பணம் வந்துடுச்சான்னு பாத்து சொல்லுமா" என்றார் என் முன் இருந்த பாட்டி.

பணம் வந்துவிட்டது என்று கூறியதும் யாரோ எழுதிக் கொடுத்திருந்த பணம் எடுக்கும் படிவத்தை நீட்டினார்.

நானும் அவர் கணக்கில் இருந்து ஆயிரத்தி இருநூறு ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்தேன்.

அதை அவர் கையில் வாங்கியதும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

"நோய் நொடி இல்லாம நீண்ட ஆரோக்கியத்தோட நல்லா இருக்கணும் கண்ணு" அவர் குரலில் கிடைத்த எதிர்பாராத பாசத்தில் திளைத்துப் போனேன்.

மனிதர்கள் உண்மையில் அன்பு நிறைந்தவர்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

என்னுயிர் நின்னதன்றோ - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மல்லிகா - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சோமசுந்தரி - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் இருளை வென்ற மின்சுடர்: 1930-களின் தடைகளைத் தகர்த்த முதல் பெண் பொறியாளரின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தலைமுறை கடந்த தேவ கானம்: அழியா வரம் பெற்ற டி.எம்.எஸ் காவியப் பாடல்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பேனா பிடிக்கத் தெரியாத தலைமுறை! - உங்கள் குழந்தை படிக்கிறது , ஆனால் எழுதத் தெரியுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க