குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ...
தலைமுறை கடந்த தேவ கானம்: அழியா வரம் பெற்ற டி.எம்.எஸ் காவியப் பாடல்கள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
டி.எம் எஸ் ஐயாஅவர்களின்
13வது நினைவு நாள் நேற்று .
தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல்கள், உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள் அடங்கிய பாடல்கள், அழிவில்லாத தேவ கானங்கள், ஒவ்வொரு மனிதனும் மனதில் நிறுத்த வேண்டிய விஷயங்கள்,தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்கள் ...என இவர் பாடாத பாடல்களே இல்லை.
1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் .
"உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்"என்ற தன்னம்பிக்கையுடன் எழுச்சி ஊட்டக்கூடிய பாடல் சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடலை மக்கள் மனங்களில் வெகு அழுத்தமாக பதிந்(த்)து இன்றளவும் அழியா வரம் பெற்றிருக்கு என்றால் அதற்கு காரணம் டி எம் எஸ்.
பகுத்தறிவு புகட்டிய இந்தப் பாடலில் நாயகியின் மிதமான நடைக்கேற்றவாறு சாதாரணமான முறையில்அருமையாகப் பாடி ஸ்கோர் செய்திருப்பார். .

1973 'சூரியகாந்தி' படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில், டி.எம் சௌந்தர்ராஜன் அவர்கள் பாடியகாவியப் பாடல் 'பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" இந்தப் பாடலை எழுதிய கவிஞர் காரைக்குடி ஈன்றெடுத்த காவியக் கவிஞனே திரையில் பாடுவதாக அமைந்திருக்கும் .
"தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் கணவனின் ஈகோவை தன் குரலின் மூலம் அழகாய் வெளிப்படுத்தி இருப்பார் டி எம் எஸ்
இந்தப் பாடல் 53 வருடங்களை கடந்தும் புத்தம் புதிது போல் இருப்பதற்கு காரணம் ஐயா மட்டுமே!
சங்கர் கணேஷின் இனிய மெல்லிசையில் பல குடும்பப்பாங்கான மற்றும் காதல் பாடல்கள் பாடியுள்ளார்
டி எம் எஸ்
'தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது'... காதல் பாடலை மிகவும் ரொமான்டிக்காக பாடி இருப்பார் 'வெள்ளிக்கிழமை விரதம்' திரைப்படத்திற்காக.
அதே படத்தில் ஜிலுஜிலு குளுகுளு charming பியூட்டிஃபுல் என்ற பாடலை வளைந்து நெளிந்து குழைந்தும் ,
'"ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் எனும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை"என்ற மருதகாசியின் அழகிய வரிகளில் எழுதப்பட்ட பாடலை இளமை பொங்கவும் பாடி இருப்பார்.
"சிவப்பு கல்லு மூக்குத்தி...
சிரிக்க வந்த மான்குட்டி"
வி குமாரின் அற்புதமான கிராமத்து இசையில்
(எல்லோரும் நல்லவரே)
ஒரு எளிமையான தெம்மாங்கு பாடலை படு உற்சாகமாக பாடி இடையிடையே ஹம்மிங்கையும் செருகி ... வேற லெவல்.
'நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தேன் பூமாலை சூட ...'
மெலடி கிங் வி குமாரின் இசையில் (பொம்மலாட்டம் ) டிஎம் எஸ் ன் குரல் திரையில் ஜெய்சங்கருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்..
. துள்ளி விழுந்த தேன் துளி வார்த்தைகளுக்கு காதல் பொங்க உயிர் ஊட்டி இருப்பார் டி எம் எஸ்

எம் எல் ஸ்ரீகாந்த் இசையில் 1969 (தாலாட்டு) படத்தில்
'மல்லிகை பூ போட்டு
கண்ணனுக்கு மங்கள நீராட்டு'... சூலமங்கலம் ராஜலட்சுமிஉடன் இணைந்து தன்னுடைய தேன் அமுது குரலில் தாலாட்டு பாடி இருப்பார் டி எம் எஸ் மிகவும் அசால்டாக இந்தப் பாடலை பாடி இருப்பார். 57 வருடங்களைக் கடந்தும் இந்த பாடல் கண்ணனை மட்டுமல்ல நம்மையும் தாலாட்டுகிறது.
1978... கே பாலாஜி தயாரிப்பில்கே. விஜயனின் இயக்கத்தில் கண்ணதாசன் -இளையராஜா- டி எம் எஸ் -லட்சுமி- நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த "தியாகம்" திரைப்படத்தில் இடம் பெற்ற "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி .. ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா ..."
நடிகர் திலகம் அவர்கள் சும்மா நின்று கொண்டே முகத்திலேயே பாடலின் சோகத்தை வெளிப்படுத்த... அதற்கு மிகப் பொருத்தமாய் உணர்ச்சி பொங்க பாடி பாடலை வேறு தளத்துக்கு கொண்டு சென்று இருப்பார்
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை..
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை ..."
நடிகர் திலகம் அவர்கள் மொத்த பாடலுக்கும் தன் உடல் அசைவில் உருவம் தந்த பாடலுக்கு தன் குரலால் உயிரூட்டிஇருப்பார்.டி.எம்.எஸ்

காயம்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் மனங்களுக்கு மருந்தாகும் இந்த பாடல்
டி ஆர் இசையில் 1981ம் வருடம் வெளிவந்த' ரயில் பயணங்கள்'படத்தில் இடம் பெற்ற... "வசந்த ஊஞ்சலிலே ...அசைந்த பூங்கொடியே ...
உதிர்ந்த மாயம் என்ன...
உன் இதய சோகம் என்ன..
உன் இதய சோகம் என்ன ..
நூலும் இல்லை வாலும் இல்லை
வானில் பட்டம் விடுவேனா.'..
காதல் சோகப்பாடல் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் இந்தப் பாடலை தன் அனாயாசமான குரலில் பாடி அசத்தியிருப்பார்
1981ம் வருடம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்ததற்கு ஒரு காரணம் இந்தப் பாடல்.
இந்தப் பாடலுக்கு முன்னால் வரை அவர் பாடினாரென்றால் அது எம்ஜிஆர் ஆகவோ அல்லது சிவாஜியாகவோ தான் தோன்றும். ஆனால் இந்தப் பாடலில் டிஎம்எஸ் அவர்கள் தான் நம் கண் முன் வருவார். அந்த அளவுக்கு உருகி உருகிப் கணீர்ன்னு பாடி இருப்பார் டிஎம்எஸ்.
"பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது"... என்ன ஒரு ஆரம்ப ஆலாபனை,
காதலை தலைவன் முகபாவனையில் வெளிப்படுத்த, காதலி நாணத்தால் பதில் சொல்ல. மிக அற்புதமாக அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு தன் குரலின் மூலம் வசியம் செய்திருப்பார்.அந்தக்காலத்தில் ஒலிக்காத திருமண வீடே அந்தக் காலத்தில் இல்லை.
"பூ மாலையில் ஓர் மல்லிகை" உயிருள்ளவரை வாசமாய்... இருப்பதற்கு காரணம் டி எம் எஸ்.
நவரசங்களையும் தனது குரலில் பாடல்களாக வெளிப்படுத்திய டி எம் எஸ் . ஐயா அவர்களின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு காவியம் .
இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் பாடிய பாடல்களின்மூலம் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


















