இது எங்க குடும்பத்தின் சீரிஸ்?! - Brothers & Sisters Team Fun Interview | Jio Ho...
குருப்பெயர்ச்சி 2026: தடைகள் தூள் தூளாகும், பரிந்துரை வேண்டாம்... விருச்சிக ராசிக்கு எப்படி?
உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன் 2-ம் தேதி முதல் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். குன்றில் இட்ட தீபமாக ஒளிரப்போகிறீர்கள். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
1. குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், எல்லா விஷயங்களிலும் தடைகள், சிரமங்கள் விலகும். கையில் காசு-பணம் புரளும். சேமிக்கும் வாய்ப்பு உருவாகும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
2. கடகத்தில் அமர்ந்திருக்கும் குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 5-ம் இடங்களையும் பார்க்கிறார். ஆகவே, எதிர்பாராத வகையில் பணவரவு, ஆபரணம் சொத்துச்சேர்க்கை உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
3. புது எண்ணங்கள் மனதில் தோன்றும். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். நீண்டநாள் கடன்கள் ஒவ்வொன்றாக அடைபடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிரிந்தவர் ஒன்றுசேர்வர். மகன் - மகளுக்குப் பிடித்தபடி கல்யாணம் நடந்தேறும்.
4. குடும்பத்தில் தந்தையுடனான பிணக்குகள் விலகும். அவர் வழிச்சொத்துகள் வந்துசேரும். குழந்தை வரம் வேண்டி பலநாட்களாகக் காத்திருந்தவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். சொந்தபந்தங்களின் ஆதரவு பெருகும். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள்.
5. வெகுநாள்களாக இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்தவர்களுக்குச் சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும்.

6. உங்களின் தன - பூர்வ புண்யாதிபதியான குருபகவான், தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வற்றியப் பணப்பை நிரம்பும். பழைய கடனில் ஒன்றை பைசல் செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.
7. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும் புது முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். வருங்காலத்துக்கான திட்டங்களைக் கையில் எடுக்கலாம். வசதியான வீட்டுக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. புது வாகனத்தில் வலம் வருவீர்கள்.
8. அடுத்த வருட முற்பகுதியில் சிலருக்கு அயல் நாட்டுப் பயணங் கள் தேடி வரும். சிலருக்கு, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எனினும், எதிலும் அவசரம் கூடாது. எவருக்கும் கியாரண்டி கையெழுத்து போடவேண்டாம்.
9. வியாபாரத்தில், திடீர் லாபம் உண்டு. பெரிய முதலீடுகளால் போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். உணவு, ரியல் எஸ்டேட், கட்டட உதிரிப் பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
10. உத்தியோகத்தில், மேலதிகாரி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் தருவார். பதவி உயர்வு தேடி வரும். உங்களின் செல்வாக்கு உயரும். எனினும் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
11. கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்குப் புது சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புது வாய்ப்புகள் வரும்; தக்கபடி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

















