செய்திகள் :

அ.தி.மு.க, தி.மு.க, த.வெ.க... யார் ஆட்சிக்கு வந்தாலும் பவர்ஃபுல் பதவி! - யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

post image

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய அருண் ஐ.பி.எஸ், தி.மு.க ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். எப்படி இந்த மேஜிக் நடக்கிறது என தெரியாமல் சக ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழம்பிக் கொண்டிருக்க... த.வெ.க ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அருண் ஐ.பி.எஸ்.

அருண் ஐ.பி.எஸ் பின்னணி குறித்து சக ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

``சேலத்தைச் சேர்ந்த அருண், இன்ஜினீயரிங் பட்டதாரி. யுபிஎஸ்சி தேர்வில் 1998-ல் தேர்ச்சி பெற்று தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியானார். இவர் ஏ.எஸ்.பியாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி, தூத்துக்குடியில் பணியாற்றினார்.

பின்னர் பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்ட எஸ்.பி-யானார். அதன்பிறகு கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றிய அருண், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி எஸ்.பியாக பணியாற்றினார். அப்போது வழக்கறிஞர் கே.கே.சாமி என்பவரை வழக்கு ஒன்றில் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணை விவகாரம் நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் வரை சென்றது. அந்த வழக்கில் கே.கே.சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகும் இதுவரை அருண் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையிலிருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அருண் ஐ.பி.எஸ்ஸிக்கு எந்தவித முக்கிய பதவிகளும் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த சமயத்தில் சென்னை போக்குவரத்து பிரிவு, வடக்கு கூடுதல் கமிஷனரானார் அருண்.

அ.தி.மு.க ஆட்சியில் பவர்ஃபுல் பதவியிலிருந்த அருண், அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மேலிட செல்வாக்கு மூலம் காவல்துறையில் முக்கிய பதவிகளில் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி, சிவில் சப்ளை ஏ.டி.ஜி.பி, ஆவடி போலீஸ் கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்கப்பட்டார். இது அப்போது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஏழு என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. அந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குன்றத்தூரைச் சேர்ந்த ரௌடி திருவேங்கடத்தை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போது என்கவுன்ட்டர் நடந்தது. நீதிமன்ற காவலில் இருந்த திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி அவரின் மனைவி பொற்கொடி தரப்பில் வழக்கும் அருணுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

அடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், எஃப்.ஐ.ஆர் லீக்கானது முதல் அருண் பேட்டி அளித்தது வரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினருக்கு வார்னிங் கொடுத்தது. இப்படி அவ்வப்போது சர்ச்சைகளில் அருண் சிக்கினாலும் எந்த ரூட்டில் பயணித்தால் நல்ல பதவிகளை பெறலாம் என்ற மேஜிக் அருணுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

இவர், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த காலக்கட்டத்தில் த.வெ.கவின் தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்துக்கு கமிஷனர் அருண், முட்டுக்கட்டை போடுகிறார் என த.வெ.க-வினரே தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்தனர். இந்தநிலையில்தான் த.வெ.க ஆட்சியில் அருணுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி கிடைத்திருக்கிறது'' என்றனர்.

டிஜிபி அலுவலகம்

அருணுக்கு இந்தப் பதவி கிடைத்தது எப்படி என டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தோம். ``சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருபான்மை த.வெ.க-வுக்கு கிடைத்தாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால் தி.மு.க கூட்டணியிலிருந்த காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததையடுத்து விஜயால் ஆட்சி அமைக்க முடிந்தது.

இதில் ஒரு கூட்டணி கட்சித் தலைவர் மூலம் காயை நகர்த்தி இந்த போஸ்டிங்கை வாங்கியிருக்கிறார் அருண். ஏற்கெனவே அந்தக் கூட்டணி கட்சி தலைவருக்கு பிரதிபலனாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தக் காலகட்டத்தில் அருண் செய்து கொடுத்திருக்கிறார். அதைப் போல இன்னொரு கூட்டணி கட்சி தலைவரையும் காப்பாற்றியதன் விசுவாசத்துக்காக அந்தத் தலைவரும் த.வெ.க தலைமையிடம் அருண் போஸ்டிங் தொடர்பாக பேசியிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டிருப்பது காவல்துறை மட்டுமல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இந்த போஸ்டிங்கின் அதிகாரத்துக்கு தவறு செய்யும் அதிகாரிகள் பயப்படதான் வேண்டும். ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தீப்ராய் ரத்தோருக்கும் அருணுக்கும் ஏழாம் பொருத்தம். அப்படியிருக்கும் சூழலில் சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கக் கூடாது என யுபிஎஸ்சியில் அவருக்கு எதிராக ஒரு ஐ.பி.எஸ் டீம் செயல்பட்டது. தற்போது சந்தீப் ராய் ரத்தோர், இந்தப் பதவியில் தொடருவதிலும் அந்த டீம் அருண் மூலம் சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

ஏனெனில் சந்தீப் ராய் ரத்தோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என முடித்து வைக்கப்பட்ட புகார்களை அருண், தூசி தட்டினால் அது நிச்சயம் சந்தீப் ராய் ரத்தோருக்கு சிக்கலை ஏற்படுத்தும். அருணை இந்த போஸ்டிங்கில் நியமிக்கும் தகவல் கூட தற்போது முக்கிய பதவிகளிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலருக்கு தெரியாது'' என்றனர்.

இதற்கிடையில் அருணுக்கு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டதற்கு சமூக ஊடகத்திலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. விஜய்யின் ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த போது கிளம்பிய அதே அளவு விமர்சனம் அருணுக்கு பதவி கொடுத்ததற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஜோதிடர் பதவியை வாபஸ் பெற்றுவிட்டது த.வெ.க அரசு. அருண் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் முதல்வர் விஜய் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

Tvisha Sharma: கணவரின் வாக்குமூலமும் வாட்ஸ்அப் ஆதாரங்களும் - நடிகை ட்விஷா வழக்கில் தொடரும் மர்மங்கள்

மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மாவின் மரண வழக்கு, தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இந்த வழக்கை கையில் எடுத்து, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் நிகழ்ந்த மரணம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டுகள் சிறை தண்டனை! - நீதிமன்றத் தீர்ப்பும், பின்னணியும்

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரௌடி பாம் எழில் (எ) எழிலரசன் மீது கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெயின்ட்டர் தொழில் செய்பவரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு வேலைக்குச் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை: ”உங்க மகளின் ஞாபகம் வரலயா?" - நீதிபதியிடம் குற்றவாளி கண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார். இரவு வரை ... மேலும் பார்க்க

அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை; கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞர் மது(30) 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார். பசிக்கு கடைகளில் இருந்து உணவுபொருட்கள்... மேலும் பார்க்க

`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ - மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான வழுதாவூரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், அந்த ஊர் கோயிலுக்கு அருகில் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் கண்டமங்கலம் போலீ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : தோட்டத்திற்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; உடற்கல்வி ஆசிரியர் கைது!

தோட்டத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்கொடுமைசமீபகாலமாக தமிழகத்தின் பல பகுதிகள... மேலும் பார்க்க