செய்திகள் :

சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்கு உத்தரவிட்ட கோர்ட்!

post image

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘ஆப்பீசர் ஆன் டியூட்டி’ மலையாள சினிமாவில் ஒரு காட்சியில் பெண் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தும் மொபைல் எண் காண்பிக்கப்பட்டது. வழக்கமாக சினிமாவுக்காக டம்மி நம்பர் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த சினிமாவில் காண்பிக்கப்பட்டது கண்ணூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் 2014-ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வரும் உண்மையான மொபைல் எண் ஆகும். அந்த எண் அவரது ஆதார், பான் மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த சினிமா திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜீ கேரளம் (Zee Keralam) போன்ற தளங்களில் வெளியானது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த எண்ணை வில்லன் கதாபாத்திரத்தின் எண் எனத் தவறாகப் புரிந்துகொண்டு தொடர்பு கொள்ளத் தொடங்கினர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அந்த எண்ணுக்கு பாலியல் ரீதியான, அச்சுறுத்தல் நிறைந்த மிரட்டல் அழைப்புகளும், வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. இதனால் அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா காட்சி

தனிப்பட்ட மொபைல் எண்ணை, தன்னுடைய எந்தவொரு முன் அனுமதியும் இல்லாமல் திரைப்படத்தில் பகிரங்கமாகக் காண்பித்ததற்கு எதிராக பாதிக்கப்பட்ட இளைஞர் எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. படத்தின் முதன்மை தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான மார்ட்டின் பிரகாட் மற்றும் இணை தயாரிப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன்

அனுமதியின்றி தனிநபர் விவரங்களைப் பொதுவெளியில் பகிர்ந்ததற்கும், அடையாளத் திருட்டு மற்றும் தகவல் திருட்டு குற்றத்திற்கும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர, திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ஒளிபரப்பு அனுமதியை பெற்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராகவும் இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும். திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த இளைஞரின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்ச்சியாகச் செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால், மெட்டா நிறுவனம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றையும் இந்த வழக்கில் எதிரிகள் பட்டியலில் சேர்க்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஜிஹாதி' அவதூறு முதல் போலீஸ் விசாரணை வரை; மலையாளத் திரையுலகை உலுக்கும் த்ரிஷ்யம் நடிகை விவகாரம்

மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது.நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும்... மேலும் பார்க்க

"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்தைப் பெற்ற மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி, தற்போது அவருடைய மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்திய சினிமாவிற்கு மம்மூட்டி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய ட... மேலும் பார்க்க

கேமரா, நடிகர்கள் இல்லாமல் ஒரு படம் - மலையாள சினிமாவிலிருந்து முழுநீள ஏ.ஐ படம்!

இன்றைய தேதியில் ஏஐ, நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களைச் சாத்தியப்படுத்திக் காட்டிவிடுகிறது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களும் விரிந்து, ஏஐ-ம் நம் அன்றாடத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. சி... மேலும் பார்க்க

Drishyam 3: "என் சொந்த வாழ்க்கையையே பல வழிகளில் 'த்ரிஷ்யம்' படம் மாற்றியது"- எஸ்தர் அனில் நெகிழ்ச்சி

'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகமான 'த்ரிஷ்யம் 3' திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் மூன்று பாகங்களிலும் ஜார்ஜ்குட்டி... மேலும் பார்க்க

த்ரிஷ்யம் 3: "ஜார்ஜ் குட்டியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.!"- மோகன்லால் நெகிழ்ச்சி

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மீனா மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருப்பார். தமிழ், இ... மேலும் பார்க்க

Drishyam 3 Review: ஓவர்டோஸா, சுவாரஸ்ய த்ரில்லரா? மீண்டும் வெல்கிறதா மோகன்லால் - ஜீத்து ஜோசப் காம்போ?

வருண் பிரபாகரன் (ரோஷன் பஷீர்) காணாமல் போன வழக்கில், ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வருணின் தாய் கீதா பிரபாகரன் (ஆஷா ஷரத்) மற்றும் போலீஸார் குற்றச்சாட்டு வைக்க, அவற்றுக்குப... மேலும் பார்க்க