செய்திகள் :

'அண்ணா, பெரியார்..? - ஸ்டாலின், உதயநிதி பேனர்களால் நிரம்பிய கோவை மாநாடு!

post image

'என் வாக்குச் சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாடு கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தி.மு.க - வின் முக்கிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.

கோவை மாநாடு

மாநாட்டிற்காக நீலாம்பூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் பாட்டில் குடிநீர், பிஸ்கட், ஸ்னாக்ஸ், தி.மு.க கொடி அடங்கிய பொருள்களை தொகுப்பாக பைகளில் வழங்கப்பட்டது.

மாநாட்டின் பிரமாண்ட நுழைவு வாயிலில் தொடங்கி மேடை வரை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோரின் பேனர்கள் நீக்கமற நிறைந்திருந்தன. அதேவேளையில், அக்கட்சியின் முன்னோடிகளான பெரியார் அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்கள் கண்களில் தென்படும் அளவிற்கு கூட இல்லை என்பது மூத்த நிர்வாகிகளின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாநாடு

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், " தி.மு.க மாநாடு என்றாலே தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிரமாண்ட பேனர்கள் தான் அடையாளமாக இருக்கும். ஆனால், இந்த மாநாட்டில் எந்தவொரு பேனரிலும் அண்ணாவும் இல்லை, பெரியாரும் இல்லை. மேடையில் மாலை அணிவிக்கப்பட்ட உருவப்படங்கள் மற்றும் ஒரே இடத்தில் ஸ்டாம்ப் சைஸ் படங்களைத் தவிர வேறு எங்கும் கழக முன்னோடிகளின் படங்களை பார்க்க முடியவில்லை. தலைவர் ஸ்டாலினைவிட உதயநிதியை முன்னிலைப்படுத்தும் வகையில் மட்டுமே மாநாட்டு ஏற்பாடுகளை செய்து பேனர்களால் நிரப்பியிருக்கிறார்கள்" என்றனர்.

Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு

திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது.Congதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்ற... மேலும் பார்க்க

'ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை'- தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

லவ் ஜிகாத்தை மையமாகக்கொண்டு வெளியான கேரளா ஸ்டோரி சினிமாவின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' என்ற திரைப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார... மேலும் பார்க்க

அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பு கடந்த வாரம் வந்ததில் இருந்து உள்ளுக்குள்ளும், வெளியே... மேலும் பார்க்க

'அவர் இதை கடந்துதான் போக வேண்டும், அரசியலில் இது.!' - விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து அண்ணாமலை

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜய் - சங்கீதா இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்... மேலும் பார்க்க

இனி 'இந்த' ஏஐ வேண்டாம் - ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு; காரணம் என்ன?

ஏ.ஐ இப்போது உலக அரசாங்கங்களின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. இதில் அமெரிக்கா மட்டும் விதிவிலக்கல்ல.அமெரிக்காவின் அரசாங்க துறைகளில் பெரும்பாலும் ஆந்த்ரோபிக் ஏ.ஐ (Anthropic) பயன்படுத... மேலும் பார்க்க

'அமைதிப்படை அமாவாசை தான் ஓபிஎஸ், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என.!' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரையில் உள்ள செய்தியாளர்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, " தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மூலம் அவர் தி... மேலும் பார்க்க