செய்திகள் :

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" - தவிக்கும் கோவை கிராம மக்கள்

post image

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது.

சிமெண்ட் துகள்கள் வீடுகள், வாகனங்கள், பொருட்கள், செடி, கொடிகள் என அனைத்தும் தூசி அடைந்து வெண்மை நிறமாக காட்சியளிக்கின்றன. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் குரும்பபாளையம் பகுதி மக்களின் உடல்நலமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி, கோவை - பாலக்காடு சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “சிமெண்ட் ஆலை ஏசிசி நிறுவனத்திடம் இருந்தவரை புகையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாங்க. அதானி நிறுவனம் வாங்குன அப்புறம் இரவு, பகல் பார்க்காம அதிகளவுல புகையை வெளியேற்றுறாங்க. இதனால எங்க கிராமமே மூச்சு திணறுது.

சிமெண்ட் தூசு
சிமெண்ட் தூசு

ஊரு முழுக்க வீடு, மரம் செடி, கொடி, வண்டி எல்லாம் சிமெண்ட் தூசியா இருக்கு. இந்தப் புகை தூசினால கண் எரிச்சல், தொண்டை வலி, சளி இருமல் பாதிப்பு, தோல் அலர்ஜி, சைனஸ், நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், வயிற்று உபாதை நிறைய நோய் வந்திட்டே இருக்கு.

எங்க வருமானத்துல பாதியை ஹாஸ்பிடலுக்கே செலவு பண்ண வேண்டியதா இருக்கு. டாக்டர்கிட்ட போன இந்த ஊருல நீங்க இருக்காதீங்க, காலி பண்ணிட்டு பக்கத்து ஊருக்குப் போனத்தான் உங்க பிரச்னை தீரும்னு சொல்லுறாங்க.

சிமெண்ட் தூசு
சிமெண்ட் தூசு

வீட்டோட கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடி வைச்சாலும், சிமெண்ட் தூள் உள்ளே வந்திடும். தரை மட்டுமில்லாம டிவி, பிரிட்ஜ், பாத்திரம்னு எல்லாத்திலும் வெள்ளை வெள்ளையா படிந்திடும். எவ்வளவு டைம் சுத்தப்படுத்தினாலும் போகாது. குடிக்கும் தண்ணீயில, சாப்பிடுற சாப்பாட்டுல கூட சிமெண்ட் தூசி விழுந்திடுது.

கொஞ்ச நேரம் வீட்டுக்கு வெளியே நின்னா கூட, உடம்பு முழுக்க சிமெண்ட் தூசி அப்பிக்கும். இதனால நாங்க ரொம்ப சிரமப்படுறோம். மரம் செடிகள் மீது சிமெண்ட் துகள் படியுறனால எல்லாம் கருகி போயிடுது. மண்ணின் நிறமே மாறுனதால, விவசாயம் பாழாகிடுச்சு.

இது சம்மந்தமா ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்னு பல இடங்கள்ல புகார் சொல்லியும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவுக்கு மட்டுமே ஆய்வு நடத்ததுறாங்க. நாங்க நிம்மதியா வாழவும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? - வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

"முதலாளிகளே லஞ்சம் தருகின்றனர்; நடவடிக்கை எடுப்பீர்களா?" - அமைச்சர் கீர்த்தனாவிடம் CPIM கேள்வி

லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்... மேலும் பார்க்க

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' - ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை ... மேலும் பார்க்க

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" - கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்... மேலும் பார்க்க

"டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன்" - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து... மேலும் பார்க்க

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" - அமைச்சர் நிர்மல்குமார்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க