செய்திகள் :

'அதிமுக-வுக்கே யூடர்ன்?' - கடுப்பில் தவெக நிர்வாகிகள்; குழப்பும் இசக்கி சுப்பையா!

post image

`இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை மீண்டும் எம்.எல்.ஏவாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் தவெகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா.

இசக்கி சுப்பையா

வித்தியாசமாக குழப்பியடிப்பதோடு 'அதிமுகவில் அநியாயமாக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதினார்கள்' என அதற்கு நியாயம் கேட்பது போல இசக்கி சுப்பையா பேசி வருவதால் லோக்கல் தவெக நிர்வாகிகள் அவர் மீது கடுப்பில் இருக்கின்றனர்.

இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட சீனியர் நிர்வாகிகள் சிலர், 'இசக்கி சுப்பையா அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தார். அதிமுகவில் திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தார். தவெகவிலும் அதே பதவியை எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்ததை போலவே திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் என இரண்டு பதவிகளை தலைமை அவருக்கு வழங்கியது.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா

கட்சியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் 30 ஆண்டுகளாக இயக்கத்துக்காக உழைத்தவரிடமிருந்து ஓரு மாவட்டத்தையே பிடுங்கி இவரிடம் மொத்தமாக ஒப்படைத்துவிட்டார்கள். இதைவிட அவருக்கு வேறு என்ன முக்கியத்துவம் வேண்டும்? ஆனால், அவருக்கு கட்சி அளிக்கும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப தொகுதிக்குள் அவர் வேலை பார்ப்பதே இல்லை.

தலைவரின் பிறந்தநாளுக்கு அவர் தரப்பில் ஒரு போஸ்டர் கூட அடிக்கவில்லை. மாவட்டச் செயலாளர் போஸ்டிங் கிடைத்தால் செலவழிக்கலாம் என கமுக்கமாக இருந்துவிட்டார். இது அதிமுக வலுவாக இருக்கும் தொகுதி. இரட்டை இலைக்காக ஓட்டு கேட்டுதான் வென்றார். இப்போது அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பதால் கணிசமான எண்ணிக்கையில் அதிமுக அனுதாபிகள் இவர் மீது கடுப்பில் இருக்கின்றனர்.

இடைத்தேர்தலில் வெல்ல வேண்டுமெனில் இப்போதே அவர் களத்தை தயார் செய்ய தொடங்க வேண்டும். தளபதிக்காக நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். எதையுமே செய்யாத இசக்கி சுப்பையா இப்போது வந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ போஸ்டிங்கே திரும்பக் கேட்டு குழப்புகிறார். தளபதியே இடைத்தேர்தலை மீண்டும் நடத்த வேண்டுமென மனுத் தாக்கல் செய்கையில், இவர் அதற்கு நேர்மாறாக இப்படியொரு மனுவை தாக்கல் செய்வது தலைமைக்கே எதிரான செயலாக இருக்கிறது. அவர் அதிமுகவுடன் மீண்டும் பேசத் தொடங்கி விட்டாரோ எனும் சந்தேகம்தான் எங்களுக்கு எழுகிறது. இதுதொடர்பாக தலைமைக்கும் புகாரை எடுத்து செல்வோம்' எனப் பொருமுகின்றனர்.

சீமான்
சீமான்

இசக்கி சுப்பையா தரப்பில் பேச்சு கொடுக்கையில், 'தவெகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கோ அமைப்புச் செயலாளர் பதவிக்கோ எந்த அதிகாரமும் இருப்பதாக தெரியவில்லை. லோக்கல் நிர்வாகிகளும் அண்ணனுக்கு ஒத்துழைத்துப் போவதில்லை. அதனால் அண்ணனே கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருக்கிறார். இடைத்தேர்தல் சீக்கிரமாக வந்தால் வென்று அமைச்சர் பதவிக்கு மூவ் செய்யலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருக்கிறார். மற்றபடி வேறெந்த பிரச்னையும் இல்லை' என்கின்றனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் புகைய தொடங்கியிருக்கும் பிரச்னைகளுக்கு தலைமை முகம் கொடுக்குமா என்பதே தவெக நிர்வாகிகளின் கேள்வியாக இருக்கிறது.!

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க