செய்திகள் :

"அது காணிக்கையல்ல; அரசியல் சாசன ஆவணம்" - வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்ற அமைச்சர்; சு.வெ கண்டனம்

post image

தமிழ்நாடு அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வேளாண் துறை அமைச்சர் வினோத் அதன் வரைவு ஆவணத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தமிழ்நாடு வரலாற்றுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில், பட்ஜெட் ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்ட முதல் நிகழ்வு இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமைச்சர் வினோத் ரவி
அமைச்சர் வினோத் ரவி

இந்த நடவடிக்கையை அமைச்சரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கையாகச் சிலர் ஆதரித்தாலும், அரசின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை மத வழிபாட்டுடன் இணைப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினரும் அரசியல் பார்வையாளர்களும் முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக சிபிஎம் எம்.பி.சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம்.

தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களைக் காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க