செய்திகள் :

`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

post image

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிம்ரன் தனது எக்ஸ் பதிவில், ``பல ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு, மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை எனது குடும்பத்தினருடன் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அன்று முதல் இன்று வரை எண்ணற்ற மக்களின் அன்பைப் பெறக் காரணமான அவருடைய அதே அரவணைப்பு, எளிமை மற்றும் நேர்மை இப்போதும் அவரிடம் துளியும் மாறாமல் அப்படியே இருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான விஜய்யின் அர்ப்பணிப்பும், தொலைநோக்கு பார்வையும் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது. மேலும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்லவிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், எதிர்காலப் பணிகளுக்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா?

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் ... மேலும் பார்க்க

`எங்க வீட்டுல சோலார் செட்அப் இல்ல; பவர் கட் தொடர்பா நான் பேசினது தற்குறித்தனமா?'- மாஸ்டர் மகேந்திரன்

தமிழகம் கடந்த சில தினங்களாகச் சந்தித்து வரும் பவர்கட் பிரச்னை தொடர்பாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாக, சமூக ஊடகங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.... மேலும் பார்க்க

"ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்!" - கஞ்சா கருப்பு சர்ச்சை பேச்சு

நடிகர் ரவி மரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, க... மேலும் பார்க்க

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க