செய்திகள் :

"அந்தத் தொகுதிகள்தாம் வேண்டும்" - அமைச்சர்களின் தொகுதிகளைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானம்?

post image

தமிழக அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தி.மு.க-வில் முதன்மைச் செயலாளராகவும் இருப்பவர் கே.என்.நேரு.

அதேபோல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், தி.மு.க-வின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இதில், அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியிலும், அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியிலும் கடந்த தேர்தலில் நின்று வென்றுள்ளனர்.

kn neru
kn neru

வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இருவரும் அதே தொகுதிகளிலேயே போட்டியிட இருக்கிறார்கள் என்று தி.மு.க வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த இரு தொகுதிகளையும் தத்தமது கட்சிகளுக்குக் கேட்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகக்குழு கூட்டங்களில் தீர்மானம் போட்டு அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படும் தகவலால், திருச்சி மாவட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் குழப்ப மேகம் சூழ்ந்திருக்கிறது.

இதுபற்றி, திருச்சி மாவட்ட அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

"'தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம்' என்று இரு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாகக் கோரிக்கை குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளைத் தங்களுக்குக் கேட்க வேண்டும் எனத் தீர்மானமும் நிறைவேற்றி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை தி.மு.க-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழுக் கூட்டத்தில் திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளைக் கேட்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி மாநிலக் குழுவுக்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.

இதில், திருச்சி மேற்கு அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதி. திருவெறும்பூர் அமைச்சர் அன்பில் மகேஸின் தொகுதி. கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில்தான் வரும் தேர்தலிலும் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்கள்.

கடந்த பொங்கலின்போதே கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்தார். அதை வைத்தே அமைச்சர் மறுபடியும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடப் போவது உறுதி என்ற பேச்சு கிளம்பியது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அதேபோல், ஆரம்பத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு தொகுதிக்கு வரும் தேர்தலில் மாறப்போகிறார், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்றெல்லாம் பல தகவல்கள் உலாவரத்தொடங்கின. ஆனால், அவரும் ஏற்கெனவே கடந்த இரண்டு தேர்தல்களாக நின்று வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியிலேயே இந்தமுறையும் நிற்க முடிவெடுத்து, அதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மட்டத்தில் சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இரண்டு அமைச்சர்களின் தொகுதிகளையும் தத்தமது கட்சிகளுக்குக் கேட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி பரஸ்பரம் தங்கள் மாநிலக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்களாம். இது, இரண்டு அமைச்சர் தரப்பையும், திருச்சி மாவட்ட தி.மு.க-வினர்களையும் அதிர வைத்திருக்கிறது" என்றார்கள்.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம்.

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவெறும்பூரைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றியதாகச் சொல்லப்படுவது தவறான தகவல். நாங்கள் அப்படி எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை.

திருச்சி கிழக்கு தொகுதியைப் பற்றிப் பேசினோம். லால்குடி தொகுதியைப் பற்றிக்கூட யோசித்தோம். ஆனால், திருவெறும்பூர் தொகுதியைப் பற்றி எதுவும் பேசவே இல்லை. யாரோ அப்படி ஒரு தவறான தகவலைத் திட்டமிட்டு பரப்புறாங்க.

vetriselvan
vetriselvan

எதற்காக அப்படிச் செய்றாங்க என்று தெரியவில்லை. கட்சித் தலைமைக்கு எந்தத் தொகுதிகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பது தெரியும். அதனால், அவர்கள் பேசி முடிவுசெய்வார்கள்" என்றார்.

அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவாவிடம் பேசினோம்.

"திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால், வெற்றி நிச்சயம் என்று மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு அனுப்பியது உண்மைதான். அமைச்சர் தொகுதி என்றால் கேட்கக் கூடாது என்று இருக்கா? அப்படினு ஒண்ணும் கிடையாதே.

கட்சி கிளைகள் எவ்வளவு இருக்கு, எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், வெகுஜன அமைப்புகள் என்னென்ன இருக்கின்றன, உள்ளாட்சி மன்றங்கள் எத்தனை இருக்கின்றன எனக் கட்சிக் கட்டமைப்பு வலுவாக இருக்கும் தொகுதிகளைப் பற்றி சொல்ல சொன்னார்கள்.

இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா
இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா

அந்த அடிப்படையில் நாங்கள் வலுவாக உள்ள தொகுதிகளைக் கேட்கச் சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறோம். கிடைக்குமா, கிடைக்காதா என்பது வேறு விஷயம். ஆனால், எங்கள் கட்சி வலுவாக உள்ள தொகுதிகளைக் கேட்கச் சொல்லி அனுப்பியிருக்கிறோம்.

எங்க கட்சி புறநகர் மாவட்டம் சார்பிலும் திருவெறும்பூர் தொகுதியைக் கேட்டு தலைமைக்குத் தீர்மானம் போட்டு அனுப்பியிருக்காங்க" என்றார்.

இறுதியாக, இந்த விவகாரம் குறித்து தி.மு.க திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணியிடம் பேசினோம்.

"என்ன ஐடியா, யாரோட தூண்டுதலின் பேரில் இப்படி செய்தார்கள் என்பது தெரியவில்லை. இரண்டு அமைச்சர்கள் தொகுதிகளையும் அவர்கள் கேட்பது, எனக்கு ஒன்றும் புரியவில்லை.

வேறு ஏதேனும் காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் எதுவும் அரசியல் காரணம் இருக்கலாம். திருவெறும்பூர், திருச்சி மேற்கு, லால்குடி ஆகிய தொகுதிகள் காலம் காலமாக தி.மு.க அதிகமுறை வெற்றிபெற்ற தொகுதிகள். அதைக் கேட்கிறார்கள் என்றால், இதில் ஏதோ உள்ளடி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

தி.மு.க திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி
தி.மு.க திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி

இதைக் குறிவைத்து வேறு எங்கோ அடிக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. அதேநேரம், இதில் ஆச்சர்யமும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், கட்சித் தலைமை யாருக்கு சீட் ஒதுக்கினாலும் நாங்க வேலை பார்ப்போம். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினாலும் அவர்களை ஜெயிக்க வைப்போம்" என்றார்.

ஆக, திருச்சி மாவட்ட தேர்தல் அரசியல் களம் இப்போதே சூடாக ஆரம்பித்துவிட்டது!

விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்."ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் கட்சியின் முடிவு. மற்... மேலும் பார்க்க

`அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' - வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்!

வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்நினைவுச் சுவடுகள் 6தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில், வாக்குச்சீட்டு என்பது ஒருபோதும் சாதாரணமான காகிதமாக இருந்ததில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க

'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

சில நாள்களாக, 'எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்... தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து குரல் எழுப்பி வந்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர். இது திமுக, காங்கிரஸ் இடையே அனலை கிள... மேலும் பார்க்க