அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது
சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இருந்த ஆா்ப்பாட்டத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பித்த தமிழக அரசைக் கண்டித்தும் கடலூா் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவலறிந்த நகர போலீஸாா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து இரவு விடுவித்தனா். இதேபோல, குமராட்சி கடை வீதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக ஒன்றியத் தலைவா் வினோத்குமாா் தலைமையிலான பாஜகவினா் 20 பேரை குமராட்சி போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.