செய்திகள் :

`அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க விரும்பவில்லை'- ஆர்ஜே ஆனந்தி

post image

இணையம் என்பது வெறும் கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல , அதை அறிவுத் தளத்தில் மாபெரும் திறவுகோலாகத் தன் டிஜிட்டல் பயணத்தின் மூலம் நிரூபித்து , 'தி புக் ஷோ' மூலம் டிஜிட்டல் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தைக் கடத்தியது தொடங்கி சமூகப் பிரச்னைகளைத் துணிச்சலாக ஓங்கி ஒலித்தது வரை இவரின் டிஜிட்டல் பயணம் சமூகப் பொறுப்புணர்வு மிக்கது.

பாட்காஸ்டராக, புத்தக விமர்சகராக, மேடைப் பேச்சாளராக... இப்படிப் பல பரிமாணங்களில் டிஜிட்டல் வெளியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, பல லட்சம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் ஆர்ஜே ஆனந்திக்கு ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் போற்றும்விதமாக Digital Icon விருது வழங்கப்பட்டது.

விருதை, திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும், அவரின் மனைவியும் நடிகையுமான ரோஜாவும் இணைந்து வழங்கினார்கள்.

தொடர்ந்து பேசிய ஆர்ஜே ஆனந்தி, ``ஜென்ஸி தலைமுறை நினைத்தால் எந்த வரலாற்று மாற்றத்தையும் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பல புத்தகங்களை உயர்த்திப் பேசிய நான், பல்வேறு புத்தகங்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.

எல்லாப் புத்தகங்களும் நல்ல கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்துவதில்லை.

சில புத்தகங்கள் அநீதியையும், தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துகின்றன. எனவே, அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க நான் விரும்பவில்லை" என்றார்.

`அசிஸ்டன்ட் டைரக்டரை நம்பி எப்படி படம் எடுப்பதுன்னு சொன்னாங்க; அந்த நேரத்துல என் மனைவிதான்...'- ரியோ

கதைகளை வெறும் காட்சிகளாக இல்லாமல், பார்ப்பவர்களின் மனதில் நிற்கும் அனுபவங்களாக உருவாக்கும் சேனல், `Finally’. சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை என ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒர... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2026: ``போன வருடம் நாமினேஷன்ல இருந்தேன்; இந்த வருடம் வாங்கிட்டேன்" - ஜெனி

நமது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியான Content-ஆக மாற்றி, சுவாரஸ்யமான கதைசொல்லல் மற்றும் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஒற்றையாளாக தூள் கிளப்பியதன் மூலமாக பிரபலமான ச... மேலும் பார்க்க

“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?

இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்... மேலும் பார்க்க

விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026: உங்கள் மனம் கவர்ந்த படைப்பாளிகளை கெளரவிக்கும் பிரமாண்ட மேடை!

தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களில் தங்களின் திறமைகளால் கலக்கி வரும் படைப்பாளிகள், பிரபலங்கள் மற்றும் கலைஞர்களைக் கெளரவிக்கும் வகையில், 'விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026' விழா, செப்டம்பர் ... மேலும் பார்க்க

JioHotstar: `பிக்பாஸ் முதல் ஹார்ட் பீட் வரை' - பிற நாடுகளுக்கும் விரிவடையும் `ஜியோ ஹாட்ஸ்டார்'!

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் தன் ஓடிடி நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போ... மேலும் பார்க்க

'இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி' - மத்திய அரசு சொல்வது என்ன?

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொழுதுபோக்காக சிலர் வீடியோக்களை வெளியிட்டு அதில் லட... மேலும் பார்க்க