செய்திகள் :

`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

post image

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை
திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை

இந்நிலையில் அன்பில் மகேஸ் வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்,பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று ... மேலும் பார்க்க

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை ... மேலும் பார்க்க

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆ... மேலும் பார்க்க

"அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை" - சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரமேஷ் சென்னித்தலாவுடன் இருக்கும் புகைப்படங்களை அங்குள்ள வெளிநாடு வாழ் கேரளத்தவர்களும், கேரள எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

`மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் அரசியல்' - அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.ச... மேலும் பார்க்க