செய்திகள் :

"அப்போது மமிதா பைஜூ என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு தைரியத்தை கொடுத்தார்!" - அனஸ்வரா ராஜன்

post image

நடிகை அனஸ்வர ராஜன் தற்போது தெலுங்கில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்திருக்கும் 'இட்லு அர்ஜுனா' என்ற திரைப்படம், அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Itlu Arjuna Movie
Itlu Arjuna Movie

'சூப்பர் சரண்யா', 'பிரணய விலாசம்' ஆகிய திரைப்படங்களில் மமிதா பைஜுவும் அனஸ்வர ராஜனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

மமிதா பைஜுவுடனான நட்பு குறித்து, சமீபத்தில் 'இட்லு அர்ஜுனா' படத்தின் புரொமோஷனுக்குக் கொடுத்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

அனஸ்வர ராஜன் பேசுகையில், "எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பல தருணங்களில், மமிதா என் பக்கத்திலேயே இருந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு மிகப்பெரிய தைரியத்தையும் ஆதரவையும் கொடுத்தார்.

அவர் கொடுக்கும் அந்த நம்பிக்கையும் ஆறுதலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நல்ல மனிதராகவும், சிறந்த நடிகையாகவும் மமிதாவை நான் எப்போதும் வியந்து பார்க்கிறேன்.

Anaswara Rajan
Anaswara Rajan

எங்கள் நட்பு வெறும் சினிமா வேலைகளோடு முடிந்துவிடுவதில்லை; அது உண்மையான அன்பிலும் அக்கறையிலும் கட்டமைக்கப்பட்டது" என்றவர், "தொடக்க காலத்தில் மற்ற நடிகைகளோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டவை என் மனதைப் பாதித்திருக்கலாம்.

ஆனால், இப்போது இதுபோன்ற ஒப்பீடுகளை நான் ஒரு போட்டியாகப் பார்ப்பதில்லை; இவை எதுவுமே என்னை இப்போது பாதிப்பதும் இல்லை" எனப் பேசியிருக்கிறார்.

`அந்த அன்பும் கதகதப்பான காதலும் ஈர்த்தது..!' - பெத்லஹேம் குடும்ப யூனிட் படம் குறித்து கேரள முதல்வர்

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவானப் படம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம். கிராமத்துப் பின்னணியும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவுகளைக் காட்டிய விதமும், ... மேலும் பார்க்க

BKU: "அந்த சிக்கலான சூழலில் இதை செய்தோம்; இது என் பர்சனல் வெற்றி!" - இயக்குநர் கிரிஷ் ஏ.டி

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குந... மேலும் பார்க்க

BKU: "எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!" - மமிதா பைஜூ

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்... மேலும் பார்க்க

Jailer 2: "மோகன்லால் சாரின் காட்சிகளை சுருக்குவது தேவையற்றது!" - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட சிலர் கேமியோ ரோலில் வருகிறார... மேலும் பார்க்க

'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மூலம் டிரெண்டான பாடல் - மீண்டும் உயிர்பெற்ற 30 வருட பழைய சினிமா!

சமீபத்தில் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம். இப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'அன்னா' என்கிற ஒரு... மேலும் பார்க்க

Dileep: "என் தரப்பு உண்மையை எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்..." - திலீப் ஓபன் டாக்

மலையாள நடிகர் திலீப், கத்தாரில் நடைபெற்ற 'திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். Dileep's Neekam Filmகடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியி... மேலும் பார்க்க