வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்... கதறி அழும் மக...
அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்?
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026'-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
அந்தக் கட்டண உயர்வின் பட்டியல்...
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு:
36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு
சாதாரண பாஸ்போர்ட் - ரூ.2,500
தட்கல் பாஸ்போர்ட் - ரூ.5,000

60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு
சாதாரண பாஸ்போர்ட் - ரூ.3,500
தட்கல் பாஸ்போர்ட் - ரூ.6,000
தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற
சாதாரண பாஸ்போர்ட் - ரூ.5,000
தட்கல் பாஸ்போர்ட் - ரூ.7,500
தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற
சாதாரண பாஸ்போர்ட் - ரூ.6,000
தட்கல் பாஸ்போர்ட் - ரூ.8,500
18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு...
36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு
சாதாரண கட்டணம் - ரூ.1,750
தட்கல் கட்டணம் இல்லை.
தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற
சாதாரண கட்டணம் - ரூ.4,250
தட்கல் கட்டணம் - ரூ.6,750