செய்திகள் :

"அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார்" - நயினார் நாகேந்திரன்

post image

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடிவடையக் கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது?

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை.

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு தி.மு.க-வின் வாடிக்கையான ஏமாற்று வேலை. நாளை புதுக்கோட்டையில் பா.ஜ.க யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளும், கூட்டணியில் சேரப் போகும் கட்சிகளும் கலந்து கொள்வார்கள்.

nayinar nagenthiran
nayinar nagenthiran

அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பது அவர் வந்து சென்ற பின்புதான் தெரியும். யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதைக் காட்டிலும் யார் முதலமைச்சராகத் தொடரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

தி.மு.க ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி. போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆட்சி. உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா... தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின... மேலும் பார்க்க

TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக்கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மு... மேலும் பார்க்க

`தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்று என் கண்களுக்குத் தெரியாது' - டி.டி.வி.தினகரன்

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் உள்ள மஹாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, பல்வேறு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 1 மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மணா‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு… எங்கள் பகைவர் எங்கோ மறைந்தா... மேலும் பார்க்க

சென்னை: பயன்பாட்டுக்கு வந்த மெரினா `இரவு நேர காப்பகம்' - விரிவாக்கும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி!

சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தளம் என்பதையும் தாண்டி, பலரின் வாழ்வாதாரத்திற்கான வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. சிறு உணவு கடைகள் தொடங்கி கைவினை பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், குதிரைகளை வைத்து ப... மேலும் பார்க்க

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைக... மேலும் பார்க்க